Categories: சினிமா

“காஞ்சனால 3..சந்திரமுகில 5″!! மாஸ் காட்டும் ராகவா லாரன்ஸ்”!!

வெளியிட்டது

பாபா படத்திற்கு பிறகு முடிந்து போனது என கூறப்பட்ட நடிகர் ரஜினியின் மீட்டெடுத்த படம் என்றால் அது “சந்திரமுகி” தான். இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் ரஜினி, ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு, நாசர், வினீத், மாளவிகா என பலர் நடித்த இந்த படம் 2005 ஆம் ஆண்டு வெளியாகி அன்று வரையில் வெளியான தமிழ் படங்கள் அதனை ரெகார்ட்களையும் உடைத்து மிக பெரிய வெற்றியை பதிவு செய்தது.

"காஞ்சனால 3..சந்திரமுகில 5"!! மாஸ் காட்டும் ராகவா லாரன்ஸ்"!! 1

இந்த படம் யாரால் இவ்வளவு பெரிய வெற்றியை பதிவு செய்தது என கணிப்பது கடினமே. ரஜினி, வடிவேலு, ஜோதிகா என மூவருமே நடிப்பில் மிரட்ட, பி.வசுவின் நேர்த்தியான இயக்கம், வித்யாசாகரின் அசத்தலான இசை என அனைத்துமே ஒருசேர இந்த படம் மிக பெரிய வெற்றிக்கு வழி வகுத்தது. இப்பொது இந்த படத்தின் 2ஆம் பாகம் மிக பெரிய அளவில் தயாராவுள்ளது.

இயக்குனர் பி.வாசுவே இயக்க, ராகவா லாரன்ஸ், வடிவேலு நடிக்க இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. முதல் பாகத்தில் நடிப்பில் அனைவரையும்  மிரட்டிய  ஜோதிகா மீண்டும் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புது நாயகிகளே ஒப்பந்தம் ஆனார்கள். ஆனால் யார் சந்திரமுகி என்பதில் இன்னும் குழப்பம் நீடிக்கிறது.

முதலில் ஆண்ட்ரியா, ராஷி கன்னா, பிறகு திரிஷா என அனைவரிடமும் பேச்சு வார்த்தை நடத்தப்பட யாரும் படத்தில் இல்லை. அண்மையில் நடிகை லட்சுமி மேனன் நடிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாக கிட்டத்தட்ட அது உருத்தியாகியுள்ளது. இப்பொது படத்தில் நாயகியாக மற்றொரு நாயகி ஒப்பந்தமாகி உள்ளார். இளம் நடிகை மகிமா நம்பியாருடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் ஒப்பந்தமாகி உள்ளதாகவும் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இது உறுதிப்படுத்தப்படவில்லை.

நேற்று கர்நாடக மாநிலம் மைசூரில் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கி வேகமாக நடைபெற்று வருகிறது.  படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஏற்கனவே நடிகர் வடிவேலு செய்த அளப்பறையான வீடியோ வெளியாகி சமூகவலைத்தளங்களில் மிகவும் வேகமாக பரவியது. இப்பொது ரசிகர்களுக்கு மற்றொரு shock கொடுக்க படக்குழு தயாராகியுள்ளதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இப்போது சமீபத்திய அப்டேடாக படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் ஒன்றல்ல இரண்டல்ல 5 நாயகிகளுடன் டூயட் பாடவுள்ளாராம். ஏற்கனவே நடிகை லட்சுமி மேனன், மஹிமா நம்பியார் நடிக்கிறார்கள் என்ற செய்திகள் வெளியான நிலையில், இப்பொது படத்தில் இவர்கம் இருவர் மட்டுமின்றி மஞ்சிமா மோகன், ஸ்ருஷ்டி டாங்கே மற்றும் சுபிக்ஷா கிருஷ்ணன் என 5 நாயகிகள் மொத்தம் நடிக்கவுள்ளதாக செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதனால் ரசிகர்கள் இது பேய் படமா? இல்லை ரொமான்ஸ் படமா? என இப்போதே கேள்வி எழுப்ப துவங்கியுள்ளனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்