பென்சில் விலை ஏறிடுச்சு..புது பென்சில் கேட்டா அம்மா அடிக்கிறாங்க.! GSTயால் பாதிக்கப்பட்ட 5 வயது சிறுமி மோடிக்கு கடிதம்

வெளியிட்டது

ஜிஎஸ்டி விலை உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் ஜிஎஸ்டி விலையால் தான் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதை குறைக்கும் பொருட்டும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பின்னர் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று இரண்டு முறையும் பிரதமராக நரேந்திர மோடியே தொடர்கிறார். அடுத்ததாக 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலிலும் நரேந்திர மோடியே பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட உள்ளார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால் நரேந்திர மோடி பதவி ஏற்றது முதல் பலவிதமான வரிகளை மக்கள் தலையில் சுமத்தி வருகிறார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

பென்சில் விலை ஏறிடுச்சு..புது பென்சில் கேட்டா அம்மா அடிக்கிறாங்க.! GSTயால் பாதிக்கப்பட்ட 5 வயது சிறுமி மோடிக்கு கடிதம் 1

அதில் ஒன்றுதான் ஜிஎஸ்டி. 2015 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த இந்த ஜிஎஸ்டி, பல பொருட்களின் மீதும் வரியை சுமத்த தொடங்கியது. முன்பெல்லாம் ஓட்டலுக்குச் சென்றால் இரண்டு இட்லி சாப்பிட்டால் அதற்கான விலையை மட்டுமே கொடுத்து விட்டு வருவோம். ஆனால் தற்போது அதற்கு கூட ஜிஎஸ்டியை போட்டு வசூலித்து தள்ளுகின்றனர் ஒன்றிய அரசாங்கம். அரிசி, பால், பருப்பு பொருட்களின் விலை உயர்வு, கேஸ் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் பொருட்களின் கடுமையான விலையேற்றம், தக்காளி, வெங்காயம் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை ஏற்றம் போன்றவற்றால் மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த எட்டு ஆண்டுகளாக இது போன்ற வரி ஏற்றத்தால் சாமானிய மக்களின் வாழ்க்கை பின்னோக்கி சென்று கொண்டுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இந்த நிலையில் கடந்த மாதம் ஜிஎஸ்டி பொருட்களின் மீதான வரிகளை உயர்த்தியுள்ளார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். அதில் பென்சில் ரப்பர் உள்ளிட்ட எழுது பொருட்களுக்கு கூட ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டுள்ளது. எழுது பொருளின் விலை ஏற்றத்தால் பாதிக்கப்பட்ட ஒன்றாம் வகுப்பு படிக்கும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த கீர்த்தி துபே என்ற சிறுமி ஒருவர் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அதில் பிரதமர் மோடி அவர்களே பென்சில், ரப்பர் உள்ளிட்ட பொருட்களின் விலை ஏறிவிட்டது. பென்சில் வாங்கி கேட்டால் எனது அம்மா என்னை அடிக்கிறார். மற்ற மாணவர்கள் என் பென்சிலை திருடுகிறார்கள். தற்போது நான் என்ன செய்வது? என்று அவர் மோடிக்கு கேள்வி கேட்டு ஒரு கடிதம் எழுதியுள்ளார். இது தன் மகளின் மான்கிபாத் (மனதின் குரல்) என்று அவரது தந்தை விஷால் துபே கருத்து தெரிவித்துள்ளார். அந்த செய்தியை நீங்களும் காண… Watch the below video..

Youtube Video Code Embed Credits: Malaimurasu TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்