பாரத் நெட் திட்டத்திற்கு 6000 கோடி ஒதுக்கீடு

நாடு முழுவதும் தனியார் உதவியுடன் செயல்படுத்த இருக்கும் பாரத் நெட் திட்டத்திற்கு ரூ.6000 கோடி ஒதுக்கீடு செய்வதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பாரத் நெட் திட்டத்திற்கு 6000 கோடி ஒதுக்கீடு 1
பாரத்நெட் திட்டம்

2020-2021 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பட்ஜெட் உரையில் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புகளை அறிவித்தார்.

இதனை தொடர்ந்து இணையச் சேவை தொடர்பான அறிவிப்புகளையும் வெளியிட்டார். இவற்றுள் பாரத் நெட் திட்டத்துக்காக 6,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்மூலம், நாடு முழுவதும் தனியார் பங்களிப்புடன் தகவல் பூங்காங்கள்(data center parks) அமைக்கப்படும். பாரத் நெட் மூலம் ஒரு லட்சம் கிராம பஞ்சாயத்துக்கள் இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

கிராம பஞ்சாயத்துக்கள் அளவிலுள்ள பொதுத்துறை அமைப்புகளுக்கு இணையதள வசதி அளிக்கப்படும். குவாண்டம் தொழில்நுடப்பத்துக்காக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 8,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்’ என்று அறிவித்துள்ளார்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்