
ஆயிரம் ஆண்டுகள் பழமையான தஞ்சை பெரிய கோவிலுக்குச் சொந்தமான தட்சிணாமூர்த்தி, திரிபுராந்தகர் ஆகிய சிவன் சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. 69 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன 2 சிலைகள் தஞ்சை அரண்மனை கலைக்கூடத்தில் காட்சி பொருளாக இருந்து வந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.
தஞ்சை பெரிய கோவிலில் இருந்து 30க்கும் மேற்பட்ட சிலைகள் காணாமல் போனதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் குழு விசாரணை மேற்கொண்டனர். ஆதலால் குஜராத் அருங்காட்சியகத்தில் கடந்த ஆண்டு மேற்கொண்ட விசாரணையில் ராஜராஜ சோழன் மற்றும் லோகமா தேவி சிலைகளை மீட்டனர்.
அதற்கு அடுத்த கட்டமாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் குழு நாயக்கர் மகாலில் மேற்கொண்ட விசாரணையில் தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள கலைக்கூடத்தில் இருந்து 2 சிலைகள் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் குழு . 69 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன 2 சிலைகள் தஞ்சை அரண்மனை கலைக்கூடத்தில் காட்சி பொருளாக இருந்து வந்ததாக அறியப்படுகிறது.
கலைக்கூடத்திலிருந்து பல கோடி மதிப்பிலான 2 ஐம்பொன் சிலைகளை மீட்டனர். 56.75 கிலோ எடை கொண்ட திரிபுராந்தகர் சிலையும் 60.75 எடைகொண்ட வீணாதர தட்சிணாமூர்த்தி சிலையும் மீட்கப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் தெரிவித்தார்.
மீட்கப்பட்டுள்ள 2 சிலைகளும் முன்னதாக ராஜகோபாலசுவாமி கோவிலிலும் அதன் பின்னர் தஞ்சை தேவஸ்தானத்தில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அதன் பின்னரே கலைக்கூடத்துக்கு கொண்டுவரப்பட்டதாகவும் பொன். மாணிக்கவேல் கூறினார். நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு பின்னர் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.