காஷ்மீரின் பாதுகாப்பில் ஈடுபட்டு வந்த 7000 படைவீரர்களை திரும்ப அழைத்துள்ளது இந்திய உள்துறை அமைச்சகம்.
கடந்த ஆகஸ்ட் மாதம் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து பாதுகாப்பிற்காக இணையம் சேவை துண்டிக்கப்பட்டு, முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். மேலும் அதிக அளவிலான பாதுகாப்பு படை வீரர்கள் அங்கு நிறுத்தப்பட்டனர்.

தற்போது மத்திய ஆயுத காவல் படைகளின் (சிஏபிஎஃப்) 72 நிறுவனங்களை சார்ந்த பாதுகாப்பு வீரர்களை திரும்ப அழைத்துள்ளது மத்திய அரசு. இவற்றுள் மத்திய ரிசர்வ் காவல் படையின் 24 நிறுவனங்கள், எல்லை பாதுகாப்புப் படை, இந்தோ-திபெத்திய எல்லையோர காவல் படை, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை மற்றும் சாஷாஸ்திர சீமா பால் ஆகியவை அடங்கும்.