Watch the video below கானா பாட்டிற்கு பெயர் போன பால முருகன் என்கிற ‘கானா பாலா’ “பிறகு” திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தாலும் அட்டகத்தி படத்தின் ‘ஆடி போனா ஆவணி’ என்ற பாடல் மூலம் பிரபலமானார். தேனிசை தென்றல் தேவாவிற்குப் பிறகு கானா பாடல்களை மீண்டும் தமிழ் திரைத்துறையில் புத்துயிர் அளித்தார்.

பின்னணிப் பாடகராக மட்டுமின்றி பல படங்களுக்கு பாடல் வரிகள் எழுதியுள்ளார். சில திரைப்படங்களில் நடித்தும் உள்ளார். கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் பொழுதே கானா பாடல்கள் பாடி வந்தார்.”கானா குயில் பாட்டு” நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றியும் பெற்றார். தற்போது பேட்டி ஒன்றில் அவர் வக்கீலாக பணியாற்றியுள்ளதாகவும் அதே சமயத்தில் கானா பாடல்களை Watch the video below

பாடியுள்ளதாகவும் கூறியுள்ளார். வக்கீலாக இருந்த சமயம் நாள் ஒன்றுக்கு 2000 வரை சம்பாதிப்பாராம். பல மேடை மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பாடியும் அவற்றின் வரவு செலவு கணக்கு பார்க்கவும் செய்துள்ளார். அதற்கு 80000 வரை சம்பளம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர் ஒரு பரோபகாரர். பலருக்கு பண உதவிகள் பல செய்துள்ளார். Watch the video below – video embeded credits to Nanayam Vikatan youtube channel