ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிகழ்ந்து வரும் அடக்குமுறைகள் குறித்து பார்வையிட வெளிநாடு தூதர்களை உள்ளடக்கிய குழுவினை அழைத்து செல்வதென மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததிலிருந்து அங்கு சூழல் மிகவும் மோசமாகியுள்ளது. மக்களின் நடமாட்டம் குறைந்து, வணிகங்கள் காலவரையற்ற மூடல், பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. மேலும் மக்களின் மனநலம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதனை தொடர்ந்து இச்சம்பவம் சர்வதேச அளவில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பல்வேறு பன்னாட்டு சமூக அமைப்புகள் இந்தியாவிற்கு அழுத்தம் தந்துக் கொண்டியிருந்தன. ஆனால் இந்திய அரசு இதனை தவிர்த்து வந்தாலும், தற்போது குழு ஒன்றை ஜம்மு காஷ்மீருக்கு அனுப்ப முடிவெடுத்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் நிலைமை சுமூகமாக இருப்பதாக அரசு சொல்லி தட்டி கழித்து வந்தாலும், பல இடங்களில் கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றன. எனவே நிலைமை சீராகும் வரையில் தூது குழுவை அனுப்பாமல் இருப்பது நல்லது என அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
காஷ்மீரின் பல முக்கிய தலைவர்கள் மீது இன்னும் அடக்குமுறைகள் இருந்து வருகிறது. இதனால் பன்னாட்டு மனித உரிமை சமூகங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன. கடந்த சனிக்கிழமை (அக்.5) காஷ்மீரில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பது குறித்து அமெரிக்காவின் அதிபர் வேட்பாளர், எலிசபெத் வாரன் கவலைத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.