டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகும் வகையில் தொடங்கப்பட்டதுதான் பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதுவித நிகழ்ச்சி. எப்பொழுதும் பிக்பாஸ் ஆரம்பிக்கிறது என்றாலே யார் யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள்? என்ற ஆவல் மக்களிடையே தொற்றிக் கொள்ளும். அதற்கேற்ப இணையங்களில் வதந்திகள் றெக்கை கட்டி பறக்கும். ஆனால் பிக்பாஸ் அல்டிமேட் சற்று வித்தியாசமானது. என்னவென்றால் கடந்த ஐந்து சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து 70 நாட்கள் மட்டும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும் என்பதுதான்.
தற்போது கமல் விலகி இருக்கும் நிலையில் யார் அடுத்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்ற எதிர் பார்ப்பு மக்களிடையே நிலவி வந்த நிலையில் தற்போது புது அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சீசன் 5 ல் 3 லட்சம் ரூபாய் பணத்துடன் உள்ளே வந்து கலக்கிய சரத்குமார் மீதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..
பிக் பாஸ் நிகழ்ச்சியை சரத் குமார் தொகுத்து வழங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன நிகழ்ச்சியை காண சரத்குமார் ரசிகர்கள் வார இறுதிக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்

ஜனவரி 30ம் தேதி கோலாகலமாக தொடங்கப்பட்ட இந்த பிக்பாஸ் அல்டிமேட் 16 நபர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சீசன் 1ல் கலந்து கொண்ட ஓவியா மற்றும் பரணி ஆகிய இருவரும் எதிர்பாராதவிதமாக வரவில்லை. எனவே 14 நபர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா வருணி, தாடி பாலாஜி, ஷாரிக், வனிதா, அபிராமி, நிரூப், பாலா, அனிதா சம்பத், தாமரை, அபிநய், ஸ்ருதி, சினேகன், ஜூலி ஆகியோர் ஆவர். இதில் முதல் வாரமே சுரேஷ் சக்கரவர்த்தி வெளியே அனுப்பபட்டார். இரண்டாவது வாரம் சுஜா வெளியில் அனுப்பப்பட்டார். இதில் ஓவியா மற்றும் பரணி ஆகியோர் வைல்ட் கார்டு என்ட்ரியாக கலந்து கொள்வார்கள் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.பிக்பாஸ் அல்டிமேட் கமல் ப்ரோமோ வெளியான போதே சுவரை கொஞ்சம் உயர்த்தி கட்டுங்கள் என்று பரணியை மறைமுகமாக கூறியது போன்று இருந்தது.