காயம் காரணமாக ஸ்மிருதி மந்தனா விலகல்!

பயிற்சியில் ஈடுபட்ட போது ஏற்பட்ட காயம் காரணமாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியிலிருந்து விளக்கியுள்ளார் இந்திய மகளிர் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா.

இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள பி.சி.சி.ஐ செய்தித் தொடர்பாளர், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரிலிருந்து ஸ்மிருதி மந்தனா விலகியிருப்பதை உறுதி செய்துள்ளார். இவருக்கு மாற்றாக 20 வயதான ஆல்ரவுண்டர் பூஜா வஸ்திரகர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

விளம்பரம்

தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி இந்தியாவுக்கு பயணம் செய்து 6 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. டி20 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்று (அக்.9) முதல் ஒரு நாள் போட்டி வதோதராவில் நடைபெற இருக்கிறது.

காயம் காரணமாக ஸ்மிருதி மந்தனா விலகல்! 1

இதற்கான பயிற்சியில் ஈடுபடும் போது தான் ஸ்மிருதி மந்தனா காயமடைந்துள்ளார். தற்போது இவர் பி.சி.சி.ஐயின் மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருக்கிறார். மேலும் இவர் அடுத்த தொடரில் விளையாட மருத்துவ தேர்வில் தேர்ச்சி பெறுவாரா என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை.

விளம்பரம்
தொடர்புடையவை  2020 வருட ஐ.பி.எல்லுக்கு பிறகு வருங்காலம் பற்றி டோனி முடிவு!!

“பயிற்சியின் போது லேசான எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்க வேண்டியுள்ளது. ஆனால் தற்போது வீக்கம் இருப்பதால் சிறிது நாட்கள் ஆகும். அதன் பிறகு தான் அடுத்த முடிவுகள் எடுக்கப்படும்” என்று இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளர் டபிள்யூ.வி.ராமன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி 20 தொடரில் 21, 13, 7 மற்றும் 5 என மோசமான விளையாட்டை வெளிப்டுயுள்ளார். ஆனாலும் ஸ்மிருதி மந்தனா கடந்த சீசனில் 5 சதங்கள் மற்றும் 16 அரை சதங்கள் விளாசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment