அப்பா என் மகனை தூக்கணும்னு..பேட்டியின் போது கண் கலங்கிய சிவகார்த்திகேயன்

விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கியவர்தான் நடிகர் சிவகார்த்திகேயன். சூப்பர் சிங்கர், அது இது எது போன்ற ரியாலிட்டி ஷோக்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து பின்பு வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்தார். அதுமட்டும் இல்லாமல் ஜோடி நம்பர் 1 என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வின்னராகவும் ஆனார். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வரும் மிக எளிய பிண்ணனியில் இருந்து இன்று இவ்வளவு தூரம் முன்னேறி உள்ளார். சிவகார்த்திகேயனின் ஹீரோயிசத்திற்கு மட்டுமல்ல அவரது நகைச்சுவை திறனுக்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

அப்பா என் மகனை தூக்கணும்னு..பேட்டியின் போது கண் கலங்கிய சிவகார்த்திகேயன் 1

விளம்பரம்

 

இவர் மெரினா என்ற படம் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆனார். அதை தொடர்ந்து எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், ரெமோ என பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். சமீபத்தில் வெளியான டாக்டர் படம் மிக பெரிய அளவில் அவருக்கு வெற்றியை கொடுத்தது. நடிப்பு மட்டும் இல்லாமல் கனா என்ற படத்தை தயாரிக்கவும் செய்தார். பிறகு கோல மாவு கோகிலா என்ற படத்தில் எனக்கு கல்யாண வயசுதான் வந்துடிச்சுடி என்ற பாடலை எழுதி பாடலாசிரியராகவும் மாறினார். Youtube Video Code Embed Credits: Galatta

விளம்பரம்

அப்பா என் மகனை தூக்கணும்னு..பேட்டியின் போது கண் கலங்கிய சிவகார்த்திகேயன் 3

எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் தலைக்கணம் இல்லாமல் இருக்கக்கூடியவர் சிவகார்த்திகேயன். தனது தந்தையை நினைத்து எப்போது பேசினாலும் கண்களில் கண்ணீர் வந்துவிடும். சமீபத்தில் கூட ஒரு மேடையில் பேசும் போது தனது தந்தையை நினைத்து அழுதார் சிவகார்த்திகேயன். அவரது இளைய மகன் குகன் தாஸை தந்தை கையால் தூக்கி கொஞ்சுவதை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் சிவகார்த்திகேயன். அவரது ஆசையை நிறைவேற்றும் வகையில் ரசிகர் ஒருவர் மறைந்த சிவகார்த்திகேயனின் அப்பா மற்றும் குடும்பத்தை வரைந்து அவரின் கையில் சிவாவின் மகன் உள்ளது போல வரைந்து கொடுத்துள்ளார். இதை பார்த்த சிவா நெகிழ்ந்து போனார். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video..

விளம்பரம்
தொடர்புடையவை  தாயுமானவனாக மாறிய கவின்.! எப்படி இருக்கிறது "டாடா" படம்.! முழு திரைவிமர்சனம் இதோ.!

விளம்பரம்

Leave a Comment