எதுக்குமா உனக்கு இந்த வேலை!!தமிழக அமைச்சரை வம்பு இழுக்கும் நடிகை யாஷிகா ஆனந்த்.

நடிகை யாஷிகா தமிழில் நடந்த கமலின் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர். அதற்கு முன் சில படங்கள் நடித்திருந்தாலும் சொல்லிக்கொள்ளும் படி எந்த படமும் இல்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் 5 இடத்தை பிடித்ததன் மூலம் பெரிய நட்சத்திரம் ஆனார்.

எதுக்குமா உனக்கு இந்த வேலை!!தமிழக அமைச்சரை வம்பு இழுக்கும் நடிகை யாஷிகா ஆனந்த். 1

விளம்பரம்

அதன் பின்னர் ஜாம்பி என்ற படத்தில் நாயகியாக தோன்றினார். இப்பொது வரை பெரிய படங்கள் இல்லை என்றாலும் இன்ஸ்டாகிராமில் இவரை பார்த்து ஜொள்ளு விடுவோர் அதிகம். அதனால் சில படங்கள் வாய்ப்பு வந்து கொண்டே இருக்கிறது.

இவர் தற்போது நிலவி வரும் அரசியல் சூழ்நிலை குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டது தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விஷயம் என்னவென்றால், தமிழக உயர்கல்வி  துறை அமைச்சர் பொன்முடி சில நாட்கள் முன்பு கோவையில் நடந்த பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் முன்பே “தமிழகத்தில் ஹிந்தி பேசுவோர் பானி பூரி விற்று வருகின்றார்” என பேசி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

விளம்பரம்

எதுக்குமா உனக்கு இந்த வேலை!!தமிழக அமைச்சரை வம்பு இழுக்கும் நடிகை யாஷிகா ஆனந்த். 3

இது பல்வேறு விமர்சங்களை பெற்று வருகிறது, இது ஒரு அரசியல் விஷயம் என்பதால் பெரும்பாலான திரை நட்சத்திரங்கள் இது குறித்து பேசவில்லை. மத்தியில் ஆளும் பா.ஜ.கவை சேர்ந்த இங்குள்ளவர்கள் மட்டும் பெரிதாக இதற்கு எதிர்ப்பு கூறி வருகிறார்கள்.

விளம்பரம்
தொடர்புடையவை  மாஸ்டர் விஜய் போல் மாறிய சிவா.! பிரின்ஸ் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு.!

இது அரசியல் விஷயம், ஆனால் நடிகை யாஷிகா ஆனந்த் இது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவினை போட்டுள்ளார். அதில் அவர் ” உழைப்பில் மொழி எங்கு வந்தது, அனைவரும் தங்களுடைய வாழ்வாதாரத்திற்கு படு படுகிறார்கள், டி விற்ற ஒருவர் நாட்டிற்கு பிரதமராகி உள்ளார், இதில் பானி பூரி விற்பதில் என ஏளனம். உங்களுடைய பதிவில் அவர்களுடைய வாழ்க்கையை நீங்கள் கொச்சை படுத்துகிறீர்கள்” என பதிவிட்டுள்ளார். இப்பொது அந்த பதிவு வைரலாகி வருகிறது.

எதுக்குமா உனக்கு இந்த வேலை!!தமிழக அமைச்சரை வம்பு இழுக்கும் நடிகை யாஷிகா ஆனந்த். 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment