பேனர் வைத்து வேலைக்கு ஆப்பு வைத்து கொண்ட பெரம்பலூரை சேர்ந்தார் காவலர்.

ஆர்டிகிள் 15 படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் படமாக இங்குள்ள அரசியல் பலவற்றை பேசியுள்ள படம் நெஞ்சுக்கு நீதி. கடந்த வெள்ளியன்று வெளியான இந்த படம் ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

உதயநிதி ஸ்டாலின், தான்யா, ஷிவானி நாராயணன், ஆரி அர்ஜுனன், சுரேஷ் சக்ரவர்த்தி என பலர் நடிப்பில் அருண்ராஜா காமராஜா இயக்கியுள்ள இந்த படம், போலீஸ் இன்வெஸ்டிகஷன் கதையாக உருவாகியுள்ள இந்த படம் ஜாதி அரசியல், அரசியல் சூழ்ச்சிகள் என பல விஷயங்களை வெளிப்படையாக பேசியுள்ளது.

விளம்பரம்

பேனர் வைத்து வேலைக்கு ஆப்பு வைத்து கொண்ட பெரம்பலூரை சேர்ந்தார் காவலர். 1

உதயநிதி ஸ்டாலின் திரையுலகில் விநியோகிஸ்தராக அறிமுகமாகி பின் “ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில்” நாயகனாக அறிமுகமானார். நீண்ட நெடிய அரசியல் வரலாறு கொண்ட குடும்பத்திலிருந்து வந்தாலும் சிறிதும் அரசியல் பேசாமல் தொடர்ந்து “இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா, கெத்து, மனிதன்” போன்ற வெற்றி படங்களில் நடித்தார்.

விளம்பரம்

பின்னர் அரசியல் பணி காரணமாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த அவர் இந்த அப்படத்தின் மூலம் திரையுலகில் ரீன்ட்ரி கொடுத்துள்ளார். காமெடி வேடங்கள் மட்டுமே நடித்து வந்த முதல் முறை சீரியஸ் வக்கீலாக மனிதன் படத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரிய படுத்தினர். இன்னும் கொஞ்சம் மெருகேறி இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக கலக்கியுள்ளார்.

தொடர்புடையவை  யுவன் ஒரு பிராடு வேஸ்ட்.! யுவனை திட்டி பிரதீப் ரங்கநாதன் போட்ட பதிவுகள்.! வைரலாகும் பழைய போஸ்ட்

இப்பொது எம்.எல்.ஏவாக இருக்கும் இவருக்கு தி.மு.க சார்பில் பல இடங்களிலும் படத்திற்கு பேனர் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரம்பலூரை சேர்ந்த காவல் துறை அதிகாரி ஒருவர் ” படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்” என பேனர் அடித்து போது வெளியில் வைத்து இப்பொது சங்கடத்தில் மாட்டிக்கொண்டுள்ளார்.

விளம்பரம்

தன்னை பார்த்த பலரும் அபிமானதால் அவர் செய்து இருந்தாலும், அவர் ஒரு காவல் துறை அதிகாரி இவ்வாறு செய்வது தவறு என தங்களது எதிர்ப்புகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இதனால் அவர் சஸ்பெண்டாக வாய்ப்புள்ளது எனவும் சிலர் கூறி வருகின்றனர். இப்பொது அவர் மீது சட்ட எண் 4 கீழ் வழக்கு பதிவாகியுள்ளது.

பேனர் வைத்து வேலைக்கு ஆப்பு வைத்து கொண்ட பெரம்பலூரை சேர்ந்தார் காவலர். 3

விளம்பரம்

 

விளம்பரம்

Leave a Comment