விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக பங்கெடுத்து ரசிகர்களிடம் அறிமுகமானவர் நடிகர் அஸ்வின். சாந்தமான பேச்சும், நல்ல சமையல் கலையும் தெரிந்தாலும், அந்த நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்ட சிவாங்கியுடன் ஏற்பட்ட இவரது கெமிஸ்ட்ரியும் நன்றாக எடுபட்டதால், பல ரசிகர்கள் குறிப்பாக பெண் ரசிகைகள் உருவானார்கள்.

அந்த நிகழ்ச்சி கொடுத்த அறிமுகமும், ஏற்கனவே விஜய் டிவி தொடரான ரெட்டை வால் குருவி மற்றும் ஆதித்ய வர்மா போன்ற படங்களில் நடித்து இருந்தாலும், ஹீரோவாக நடிக்க வாய்ப்பு தேடி வந்தது. ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஹரிஹரன் இயக்கத்தில் “என்ன சொல்ல போகிறாய்” என்ற படத்தில் நாயகனாக நடித்தார்.
வெள்ளித்திரையில் படம் வெளிவருவதற்கு முன்பு படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துக்கொண்டு பேசியது தான் இன்று வரை அவருக்கு எமனாக அமைந்துள்ளது. விழா மேடைக்கு வரும் போதே வெற்றி நாயகன் போல பிரமாண்ட அலைபறியை கூட்டிக்கொண்டு ஏறினார்.

மேலும் அந்த விழாவில் பேசும் போது எதிர்ச்சியாக “நான் இது வரை 40 கதைகள் கேட்டு தூங்கினேன், நான் தூங்காத ஒரே கதை இது தான், அதனால் தான் நடிக்க ஒப்புக்கொண்டேன்” எனவும், ” இங்க இருக்குற என பாக்க வந்த உங்களையும் நாளைக்கு திரையரங்கு போய் பறக்க போறவங்களையும் நான் கண்டிப்பா ஏமாற்ற மட்டேன், எனக்கு அந்த அளவிற்கு இந்த படம் மேல் நம்பிக்கை இருக்கு” என பல்வேறாக திடீர் புகழ் உணர்ச்சி பூரிப்பில் இஷ்டத்துக்கு பேசித்தள்ளினார்.
படம் சென்ற பொங்கலுக்கு வெளியானது. வெளியான முதல் காட்சியில் இருந்தே, படம் மொத்தமாக காலியானது. அடர்க்கு அஸ்வின் குமாரை பலரும் காரணமாக கூறினர். ஆனால் பார்பதர்க்கு படத்தில் எந்த விஷயமும் இல்லாததாலும், அஸ்வினுடைய திமிர் பேசும் அனைவரையும் வெறுப்பு ஏற்றி படத்தை மொத்தமாக ஃப்ளாப் ஆகியது.
பின்னர் தன்னுடைய தவறை உணர்ந்த நடிகர் அஸ்வின், “நான் எதோ தவறுதலாக அவ்வாறு கூறிவிட்டேன், என்னை மன்னியுங்கள்” என கூறும் அளவிற்கு ரசிகர்கள் அவரை கலாய்த்து தள்ளினார். இந்த படத்தை தயாரித்த ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கு இது பெரிய நட்டத்தை கொடுத்தது.
இப்பொது சில வரன்கள் முன்பு படம் ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இன்னுமும் அவருடைய திமிரு பேச்சின் மீது கோபத்தில் இருக்கும் ரசிகர்களை தொலைக்காட்சியிலும் படத்தை மொத்தமாக நிராகரித்தனர்.
ஒளிபரப்பு TRP படத்திற்கு வெறும் 0.99 மட்டுமே பெற்றது. ஒரு படம் முதல் முறை ஒளிபரப்பில் இவ்வாறாக சொதப்புவது இது புதிதில்லை என்றாலும், இது நடிகர் அஸ்வின் மேல் ரசிகர்கள் இன்னும் கோபத்தில் தான் இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது.
இயக்குனர் பிரபு சாலமன் தற்போது இவரை வைத்து “செம்பி” என்ற படத்தை இயக்கி வருகிறார், படத்தில் அஸ்வின் குமாருடன் மூத்த நடிகை கோவை சரளா நீண்ட நாட்களுக்கு பிறகு முக்கிய தோற்றத்தில் நடிக்கிறார். அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.
