
அமெரிக்காவின் நாசா 61 ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் “அனைத்து-பெண்” (ஆல் – வுமன்) விண்வெளிநடையை வரும் வெள்ளிக்கிழமை அன்று நடத்தவுள்ளதாக கூறியுள்ளது. 1965ம் ஆண்டில் நடைபெற்ற விண்வெளிநடையில் 14 பெண் விண்வெளி வீரர்கள் மற்றுமே இதைச் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாசாவின் பெண் விண்வெளி வீரர்களான கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெசிகா மீர் ஆகியோர் அமெரிக்க விண்வெளி நிறுவனத்தால் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ஐ.எஸ்.எஸ்) வெளியே உள்ள ஒரு மின் கட்டுப்படுத்தியை மாற்றுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது அனைவரும் எதிர்பார்க்கும் முக்கிய நிகழ்வாகும்.
இவ்விரு விண்வெளி வீரர்களும் விண்வெளிப் பயணத்தின் ஒரு தொடர்ச்சியாக வருகிற 21ம் தேதி திங்கள்கிழமை அன்று சர்வதேச விண்வெளி நிலையத்தை விட்டு வெளியே வந்து புதிய பேட்டரிகளை நிறுவுவதற்காக முன்னரே தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் மின் கட்டுப்பாட்டுகளில் ஒன்று தோல்வியடைந்ததால் அதனை மாற்றுவதற்கு வருகிற வெள்ளிக்கிழமை அன்றே இப்பணியை செய்ய உள்ளனர். இவ்வாறு சர்வதேச விண்வெளி நிலையத்தின் ட்விட்டர் கணக்கில் ட்வீட் செய்ப்பட்டுள்ளது.