விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் “பாக்கியலட்சுமி”. திருமணமான கோபி அதை மறைத்து தன்னுடைய பழைய காதலி ராதிகாவை மணக்க முற்படுகிறான். விஷயம் தெரியும் பாக்கிய என செய்ய போகிறாள் என்ற பரபரப்பான சூழ்நிலையில் இந்த தொடர் சென்று கொண்டிருக்கிறது. வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் இந்த தொடருக்கு முக்கிய காரணம் இதில் ராதிகாவாக நடிக்கும் நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி.

சன் டிவியில் ஒளிபரப்பான “வம்சம்” தொடரில் நடிகை ரம்யா கிருஷ்ணனுடன் ஒரு சிரியாகதாபாத்திரத்தில் அறிமுகமான இவர், பின் விஷ்ணு விஷால் சூரியின் நடிப்பில் வெளியான “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” படத்தில் புஷ்பவாக நடித்து அனைவர்க்கும் அறிமுகம் ஆனர். அந்த படத்தில் முக்கியமான ஒரு காமெடி ரோலில் தோன்றி மிக சிறப்பாக மக்களை தன்னுடைய நடிப்பால் கவர்ந்தார்.
தொடர்ந்து சில படங்களில் சிறு சிறு பாத்திரங்களில் தோன்றியுள்ள இவர், மணல் கயிறு 2, கோ 2, பேய் மாமா போன்ற படங்களில் நடித்துள்ளார். வம்சம் தொடரிற்கு பிறகு வாணி ராணி, அன்பே வா, மரகத வீணை, அபி டைலர் போன்ற தொடர்களிலும் சிறு சிறு பாத்திரங்கள் நடித்துள்ளார்.

இருப்பினும் முன்பு புஷ்பவாகவும், இப்போது ராதிகாவாகவும் தான் இவர் ரசிகர்களுக்கு பரிட்சயம். அண்மையில் வெளியான விமலின் “விலங்கு” வெப் சீரிஸில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் தோன்றி அனைவரையும் தான் நடிப்பால் கவர்ந்தார். இப்பொது ஒரு தெலுங்கு படத்திலும் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இவர் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது போட்டோஷூட்டுகள் நடத்தி தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவது சகஜம். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை ரேஷ்மா ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார் அப்போது உங்களுடைய இடுப்பில் இருக்கும் டாட்டூ பற்றி கேட்டிருந்தார்கள் அதற்கு ரேஷ்மா சிரித்துக்கொண்டே அந்த டாட்டூவை நீங்கள் முழுமையாக பார்த்திருக்க முடியாது.
ஏனெனில் அது மிகவும் பெரிய டாட்டூ அது மட்டும் இல்லாமல் இரண்டு ரோஜாக்கள் தான் அந்த டாட்டூவில் உள்ளது மேலும் இதை நான் ரொமான்டிக்காக தான் போட்டுள்ளேன் ரேஷ்மா தெரிவித்துள்ளார்.
