கோவிலுக்குள் செருப்புடன் சென்ற நயன்..விதிகளை மீறி போட்டோஷூட்..நயன் விக்கி மீது நடவடிக்கை எடுக்க தேவஸ்தானம் முடிவு

திருப்பதி தேவஸ்தானத்தில் விதிகளை மீறி செருப்பு அணிந்து சென்றதும், போட்டோஷூட் நடத்தியதாலும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீது போலீஸில் புகாரளிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னையில் திருமணம் முடிந்த கையோடு திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்வதற்காக இருவரும் ஆந்திரா சென்று இருந்தனர். இன்று காலை நடைபெற்ற ஏழுமலையான் கல்யாண உற்சவத்திலும் இருவரும் கலந்து கொண்டனர். ஆனால் வெளியே வந்து அவர்கள் செய்த செயல் தற்போது பெரிய சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும் 

கோவிலுக்குள் செருப்புடன் சென்ற நயன்..விதிகளை மீறி போட்டோஷூட்..நயன் விக்கி மீது நடவடிக்கை எடுக்க தேவஸ்தானம் முடிவு 1

விளம்பரம்

திருப்பதி கோவிலுக்குள் காலணி அணிந்து நடமாட அனுமதி மறுக்கப்பட்ட இடத்திற்கு இருவரும் காலணி அணிந்து சென்றுள்ளனர். மேலும் அந்த வளாகத்திற்குள் போட்டோ எடுக்க அனுமதி மறுக்கப்பட்டிருக்கும் நிலையில் இருவரும் சேர்ந்து போட்டோ ஷூட்டே நடத்தி உள்ளனர். இது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது பற்றி அறிந்த தேவஸ்தான உயரதிகாரிகள் இந்த தவறு நடைபெற காரணமாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்தனர். மேலும் திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஏழுமலையான் திருக்கோவிலின் சில இடங்களில் காலணி அணிந்து செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது, அதன்படி மாட வீதிகள், கோவிலின் முன்புறம், லட்டு விற்பனை செய்யும் இடங்கள், திருக்கோவில் குளம் போன்ற இடங்கள் காலணி அணிந்து செல்வதற்கு அனுமதி இல்லை என்று கூறினார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும் 

கோவிலுக்குள் செருப்புடன் சென்ற நயன்..விதிகளை மீறி போட்டோஷூட்..நயன் விக்கி மீது நடவடிக்கை எடுக்க தேவஸ்தானம் முடிவு 3

விளம்பரம்

மேலும் இது போன்ற திருமண போட்டோஷூட்டுக்கள் நடத்த அனுமதி இல்லை என்றும், அதிகாரிகளின் கவனக் குறைவால் இந்த தவறுகள் நடைபெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் செயல் குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டு தகுந்த விசாரணை நடத்தவும், கவனக் குறைவாக இருந்த அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க திருப்பதி தேவஸ்தான உயரதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். திருமணம் முடிந்த அடுத்த நாளே பிரச்சினையில் மாட்டிக் கொண்டனர் இருவரும். நாளை காலை செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக விக்னேஷ் சிவன் அறிவித்திருந்த நிலையில் இது குறித்து இருவரும் விளக்கம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும் 

விளம்பரம்

Video Code Embed Credits: Thanthi TV

விளம்பரம்

Leave a Comment