இந்திய சினிமாவில் நடிகர்களை போல நடிகைகள் கோலோச்சுவது மிகவும் கடினம். எப்படி முயன்றாலும் குறைந்தது 10 ஆண்டுகள் மட்டுமே நீடித்து நிற்க முடியும். அதுவும் முன்னணியில் இருப்பதெல்லாம் எந்த நடிகைக்கு அவ்வளவு எளிதாக நடந்து விடுவதில்லை. ஏனெனில் நடிகைகள் திருமணம் ஆனது பின்னர் அவர்களே சில காலம் ஒதுங்கி விடுவார்கள். இல்லையேல் திருமணமானால் துறையில் இருப்பார்களே அவர்களை நாயகியாக காண்பதில்லை.

இது அனைத்திற்கும் சாட்டை அடிகொடுத்து அறிமுகமாகி 15 ஆண்டுகள் கடந்தோடியும் இன்றும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நாயகியாக இருந்து வருபவர் நடிகை நயன்தாரா. கேரளாவில் தனியார் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்த இவர் மலையாள சினிமா அறிமுகப்படுத்தினாலும், தமிழில் இவர் நடித்த “ஐயா” படமே இவருக்கு மிக பெரிய திருப்புமுனையாக அமைந்தது. முதல் படமே நல்ல வெற்றி. அடுத்த படமே மிக பெரிய ஹீரோவான “சூப்பர்ஸ்டார்” ரஜினிகாந்துடன் “சந்திரமுகி” படத்தில் நடித்து மிக பெரிய அறிமுகத்தை பெற்றார்.

பின்னர் தமிழ் மட்டுமின்றி, தென்னிந்தியாவின் அணைத்து முன்னணி நாயகர்களுடனும் இணைந்து படம் நடித்து தமிழிலும், தெலுங்கிலும் யாரும் தொட முடியாத மிக பெரிய உச்சியை தொட்டுள்ளார். 2015ஆம் ஆண்டு வெளியான “நானும் ஒரு ரவுடி தான்” பட இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் மலர, 7 வருடங்கள் காதலித்து கடந்த ஜூன் 9ஆம் தேதி மிக பிரமாண்டமாக சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர். பிரபலங்கள் பலரும் வாழ்த்த, மிக ஆரவாரமாக நடந்தேறியது இவர்களது திருமணம்.

இப்பொது தாய்லாந்தில் தேன்நிலவு கொண்டாடி வரும் இருவரும் அந்த போட்டோக்களை சமூகவலைத்தளங்களில் பரவவிட்டு வருகிறார்கள். மெஹெந்தி பங்க்ஷனில் துவங்கி, இப்பொது இவர்களுடைய தேன்நிலவு போட்டோக்கள் வரை அனைத்துமே ட்ரெண்ட்டாகி வருகிறது. இப்போது 37 வயதை ஈட்டியுள்ள நடிகை நயன்தாரா திருமண முடிந்த கையேடு மீண்டும் பிஸியாக படங்களில் நடிக்கவும் கதை கேட்டு வருகிறார்.

இப்பொது நயன்தாரா குறித்த மற்றொரு செய்தி, சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், மகுடேஸ்வரன் கோவிந்தராஜன் என்பவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் நயன்தாராவின் பெயர் குறித்த விளக்கத்தை கொடுத்துள்ளதே. தியான மரியம் குரியன் என்ற இவர், சினிமாவிற்காக நயன்தாரா என்ற பெயரை பயன்படுத்தி வருகிறார். இப்பொது அந்த நயந்தாரா பெயருக்கு நமது கவிஞர் விளக்கம் கொடுத்துள்ளார்.

அதாவது, நயனம் என்பது கண் எனவும், தாரா என்றால் நட்சத்திர என்றும் பொருள் கூறி, தான் நீண்ட நாட்களாக ஆராய்ந்து, நட்சத்திரத்தை உடு என அழைப்பார்கள் என கண்டறிந்து, இப்பொது நயன்தாரா என்றால் “உடுக்கண்ணி” என தமிழில் அர்த்தம் என பதிவிட்டு இருந்தார். இது கொஞ்சம் வைரலாகவே, அதனை கண்ட மற்றொரு இணைய தலைவாசி KRS என்பவர், அடக்கடவுளே நயன் என்றால் கண் என்பது சரியே ஆனால் தாரா என்றால் “கண் கருமணி” என்றும் நயன்+தாரா = கண்மணி மட்டுமே என அர்த்தம் கொடுத்துள்ளார். இந்த பதிவு இப்பொது மிகவும் வைரலாகி வருகிறது.
