
சாக்லேட் பாயாக அறிமுகமாகி தமிழ், ஹிந்தி மொழி படங்களில் இன்றளவும் தனக்கென தனி மார்க்கெட்டை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகர் மாதவன். மும்பையில் மாடலாக இருந்த இவர் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான ‘அலைபாயுதே’ என்ற படத்தில் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தின் ஹிந்தி ரீ-மேக்கிலும் நடித்து அங்கும் நாயகனாக அறிமுகமானார்.

தமிழ் மற்றும் ஹிந்தி என இரண்டு மொழிகளிலும் நடித்த முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வர துவங்கின. குறிப்பாக தமிழிலேயே நிறைய வாய்ப்புகள் வர துவங்கின. அடுத்தடுத்து தமிழில் வெற்றி படங்கள் அமைந்தன. மின்னலே, டும், டும், டும், ரன், தம்பி என கொடுத்து வந்தாலும் ஹிந்தியில் சில படங்களில் நடித்து வந்தார். திடீரென ஒரு பெரிய இடைவெளி உருவானது. அதனை கடந்து இப்பொது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.

சமீப காலமாக மாதவன் நடித்த இறுதிச்சுற்று படம் மிக பெரிய வரவேற்பறை பெற்று அவருக்கு மீண்டும் ஒரு ரௌண்ட வர உதவியது. இதனை அடுத்து விஜய் சேத்துப்பதியுடன் நடித்த விக்ரம் வேதா இன்னும் பெரிய வெற்றியை பதிவு செய்யவே பிஸியான நடிகராக மாறி போனார். தற்போது மாதவனே இயக்கி, தயாரித்து நடித்திருக்கும் படம் ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’. படம் ரிலீசிற்கு தயாராகி உள்ளது. இது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையப்படுத்தி எடுத்திருக்கும் படம். இந்த படம் பான் இந்தியன் வெளியீடாக தமிழ், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி என ஐந்து மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

படத்தில் ISRO விஞ்ஞானி நம்பி நாராயணனாக மாதவன் நடித்து இருக்கிறார். அவரது மனைவியாக சிம்ரன் நடித்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் சிறப்பு வேடத்தில் தமிழ் பதிப்பில் சூர்யாவும், இந்திப் பதிப்பில் ஷாருக் கானும் நடித்திருக்கிறார்கள். பெரும் பொருட் செலவில் இந்த படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த படம் ஜூலை 1-ஆம் தேதி திரைக்கு வரப்போகிறது.

இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளின் இந்நிலையில் இது தொடர்பாக மாதவன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்திருக்கிறார். அதில் அவர், அமெரிக்கா, ரஷியா, சீனா, ஐரோப்பிய நாடுகள் பல கோடிக்கணக்கில் செலவழித்து 32, 33 முறையில் தான் செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோளை அனுப்பி வெற்றி பெற்றது. ஆனால், இந்தியா சிறிய எஞ்சினை வைத்துக்கொண்டு பஞ்சாங்கத்தின் உதவியுடன் 2014 ஆம் ஆண்டு செவ்வாய்கிரகத்துக்கு செயற்கைக்கோள் அனுப்பி இருந்தது என்று கூறி இருந்தார்.

அதிலும் குறிப்பாக ட்விட்டரில் இவரது பேச்சை பலர் கேலி செய்தனர். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள மாதவன் ‘இந்தியாவில் 100 கோடி மக்களுக்கு மேல் இருக்கின்றனர். இதில் 0.2 சதவீதத்திற்கும் கீழ் பேர் தான் ட்விட்டரில் இருக்கின்றனர். கிட்டதட்ட 25 லட்சம் பேர் தான் இருக்கின்றனர். அதனை பற்றியெல்லாம் நாம் பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது.” என பேசியுள்ளார்.
