இடைத்தேர்தல் நடைபெற்ற 3 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!!

இடைத்தேர்தல் நடைபெற்ற 3 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!! 1

தமிழக இடை தேர்தல் நடைபெற்ற நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. அதே போல் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெற்றது.

நேற்று முன்தினம் மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்த நிலையில் பிரசாரத்திற்காக வந்திருந்த பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பிரதான கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட வெளிநபர்கள் தொகுதிகளில் இருந்து வெளியேறினார்கள்.

விளம்பரம்

வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெற்றது. வாக்குப்பதிவு நேரம் முடிந்த போதிலும், 6 மணிக்கு முன்பாக வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. வாக்குப்பதிவு முடிந்த இடங்களில் வாக்கு இயந்திரங்களில் சீல் வைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 24 ஆம் தேதி அன்று எண்ணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

Leave a Comment