அந்தமான் தீவில் உள்ள நிகோபாரில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3-ஆக பதிவு!!

அந்தமான் தீவில் உள்ள நிகோபாரில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3-ஆக பதிவு!! 1

அந்தமான் அருகே உள்ள நிகோபார் தீவில் இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிக்கோபார் தீவில் இன்று காலை 6.36 மணிக்கு மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகி இருந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தை உணர்ந்து வீடுகளை விட்டு வெளியே வந்த பொதுமக்கள் , நிலநடுக்கம் தொடர்ந்ததாக தெரிவித்தார்கள். சில இடங்களில் வீடுகள் சேதம் அடைந்தன. பொருட்கள் மேல விழுந்ததில் சில பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. நிலநடுக்கத்தால், பல வீடுகளில் அதிர்வு உணரப்பட்டுள்ளது. இதனால் பீதியடைந்த மக்கள் மக்கள் வீதிக்கு வந்துள்ளனர்.

விளம்பரம்

இதனால் சுனாமி ஏற்படுமோ என்று அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆனால் தற்போது வரை இந்திய வானிலை மையம் சார்பில் அந்தமான் நிகோபார் தீவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு, சுனாமி குறித்து எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தினால் மக்கள் மற்றும் கட்டிடங்களுக்கு சேதம் உண்டானதா என்பது குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

விளம்பரம்

Leave a Comment