கிராமப்புறங்களில் செயல்பட்டு வரும் நூறுநாள் வேலை திட்டத்தில் இளைஞர்களின் பங்களிப்பு அதிகரித்து வருவது கிராமங்களின் துயரத்தை நமக்கு உணர்த்துகிறது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதச் சட்டத்தின் தரவுகளை நாம் ஆராய்ந்து பார்க்கையில், 18 வயது முதல் 30 வயது வரையிலான இளைஞர்கள் ஊழியராக பணியாற்றி வருவது நமக்கு புலப்படுகிறது. இது கிராமபுற இளைஞர்களின் வேலையின்மையையும், கிராமப்புறங்களில் வளர்ந்து வரும் தீரா துயரங்களை உணர்த்தும் பாடமாக அமைகிறது.
சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் பணமதிப்பழிப்பு போன்ற அரசாங்க நடவடிக்கைகளால் ஏற்பட்ட மந்த நிலை, கிராம புறங்களின் வாழ்வாதாரத்தை கேள்வி குறியாக்கியுள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் எடுத்த கணக்கெடுப்பில், கடந்த 2017-2018ஆம் ஆண்டு நிதியாண்டில், 18 முதல் 30 வயதிலான இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
2013-2014 ஆம் ஆண்டில், வேலை வாய்ப்பு உத்திரவாத திட்டத்தின் கீழ் ஒரு கோடியாக இருந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை, 2017-2018ஆம் ஆண்டில் 58.69 லட்சமாக குறைந்து போனது. ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில், 2018-2019ஆம் நிதியாண்டில் மீண்டும் பழைய எண்ணிக்கையை எட்டுமென இந்திய எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

அதே போல, மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளித்து திட்டத்தின் கீழ் 2013-2014ஆம் ஆண்டு வரை 7.95 கோடி மக்கள் இணைந்துள்ளனர். 2014-2015ஆம் ஆண்டில் இந்த எண்னிக்கை சரிவடைந்து 6.71 கோடியாக இருந்தது. ஆனால் 2015-16 மற்றும் 2016-17 ஆம் நிதியாண்டுகளில் முறையே 7.21 மற்றும் 7.65 கோடியாகவும் உயர்ந்திருக்கிறது.
இவர்களில் இளம் வயது தொழிலாளர்களை கணக்கில் எடுத்துக்கொள்ளும் போது, 2013-14ல் 13.64 சதவீதமாகவும், 2017-18ல் 7.73 சதவீதமாகவும் சரிந்தது. இருப்பினும், இந்த எண்ணிக்கை 2018-19 ஆம் ஆண்டில் 9.1 சதவீதமாகவும், 2019-20 ஆம் ஆண்டில் 10.06 சதவீதமாக உயருமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மஜ்தூர் கிசான் சக்தி சங்கத்தின் நிறுவன உறுப்பினரான நிகில் டே இது குறித்து கூறுகையில், தற்போதைய பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளது. இதனால் இளைஞர்களின் வேலைவாய்ப்பும் இருண்டுள்ளது. இவர்கள் தங்களது கல்விக்கு தகுந்த வாழ்வாதாரத்தை தக்க வைத்துக்கொள்ள முயலுகின்றன. ஆனால் அது முடியாத பட்சத்தில், இதுபோன்ற கிராம புற வேலைகளை நோக்கி வருகிறார்கள்” என்று கூறியுள்ளார்.
மோடி அரசாங்கத்தின் ஜி.எஸ்.டி மற்றும் பணமதிப்பழிப்பு நடவடிக்கைகள் பொருளாதாரத்தில் நீண்ட நாள் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. இவை இரண்டும் தான் இளைஞர்களின் வேலைவாய்ப்புகளிலும் இடையூறை விளைவித்தன. இவைகள் கூடவே நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 2016-17ஆம் ஆண்டில் 8.2 சதவிகதமும், 2018-19ஆம் ஆண்டில் 6.8 சதவிகதமாகவும் குறைந்துள்ளது.
நன்றி: தி வயர்
தொகுப்பு: விடுதலை தமிழ்முரசு