இன்றைய காலகட்டங்களில் காதல் என்பது பெரும்பாலும் விபரித முடிவுகளிலேயே முடிந்துள்ளது. குறிப்பாக படிக்கும் பதின் பருவத்தில் வரும் காதல் சமாச்சாரங்கள் நிறைய பிரச்சைனைகளிலேயே சென்று முடிவடைகிறது. அது போன்ற ஒரு சம்பவம் தான் இப்பொது வேலூரில் நடந்தேறியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வேலூரை சேர்ந்த 20 வயது “Automechanic” படிக்கும் மாணவர் சதிஷ்குமார். வேலூர் ராணிப்பேட்டையிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வரும் இவரும், அதே பகுதியை சேர்ந்த “Medical Records” பயிலும் 18 வயதுடைய மாணவியும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இது வீட்டிற்கு தெரியாமல் இருந்து வந்துள்ள நிலையில், பெண்ணின் வீட்டில் அவருக்கு திருமணம் செய்துவைக்க மாப்பிள்ளை பார்த்துள்ளனர்.
இது குறித்து சதிஷ் தன்னுடைய வீட்டில் சொல்ல, அவருடைய வீட்டில் இருந்து பெற்றோர்கள் சென்று பெண் வீட்டில் பேசியும் உள்ளார்கள். ஆனால் சதிஷிற்கு திடீரென அவருடைய காதலி மற்றொவரை காதலிப்பதாக சந்தேகம் எழுத்துள்ளது.
இந்த சம்பவம் சில நாட்களாகவே சதிஷ் மற்றும் அவருடைய காதலி இருவரிடத்திலும் பெரும் சண்டைகளும், வாக்குவாதங்களையும் உண்டாக்கி வந்திருக்கிறது. இந்நிலையில் இருவரும் கல்லூரி செல்ல திருவலம் பேருந்து நிலையத்தில் காத்திருக்க, அப்போது பேசிக்கொண்டிருந்த போது ஆத்திரம் அடைத்த சதிஷ்குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காதலியை கழுத்தில் குத்தியுள்ளார்.
இந்த திடீர் தாக்குதலால் நிலைகுலைந்து போன அந்த பெண், ரத்த வெள்ளத்தில் கீழ விழுந்துள்ளார். பக்கத்தில் இருந்த பொது மக்கள், அந்த பெண்ணை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். திருவலம் போலீஸார் மாணவன் சதிஷ் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகினறனர். திடீரென நடைபெற்ற இந்த சம்பவம் அந்த இடத்தில் சிறுது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த விடியோவை நீங்களும் காண….
Video Courtesy- Thanthi TV