லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் 9ஆம் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் தனியார் ரெசார்ட்டில் மிக பிரமாண்டமான முறையில் நடந்து முடிந்தது. சினிமா பிரபலங்களும், நெருங்கிய உறவினர்களும் மட்டுமே பங்கேற்ற இந்த திருமண நிகழ்ச்சி தான் சென்ற ஒரு வாரமாக அனைத்து செய்திகளின் முதன்மையானவை.

2005 ஆம் ஆண்டு சரத்குமாரின் “ஐயா” படத்தின் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து ரஜினி, விஜய், அஜித், தனுஷ், விஷால், சிம்பு என முன்னணி தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் அங்கிருக்கும் முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்து சில காலங்களிலேயே தென்னிந்தியாவின் முன்னணி நாயகியாக மாறினார். மலையாளத்தில் அவ்வப்போது பெரிய நாயகர்களுடன் மட்டும் நடித்து வந்தார்.

அறிமுகமான சில ஆண்டுகளிலேயே இவர் முன்னணிக்கு உயர முக்கிய காரணம் படங்களில் இவர் காட்டிய கிளாமர் தான். பெரிய நடிகர், சிறிய படம் என எந்தவித பாகுபாடும் காட்டாமல் அனாவசியமாக கிளாமர் நாயகியாக நடித்து வந்தார். பின்னர் நடனம் இயக்குனர் பிரபுதேவா மனைவியுடன் ஏற்பட்ட மோதலால் சினிமாவை விட்டு விலகி இருந்த இவரை இயக்குனர் அட்லீ ராஜா ராணி படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

அதன் பின், வரிசையாக நானும் ரவுடி தான், கோலமாவு கோகிலா, மாயா, விசுவாசம் என வெற்றி படங்களில் கிளாமர் கொஞ்சமும் இன்றி, நடிப்பிற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து தொடர் வெற்றிகளை பெற்றார். முற்றிலுமாக அந்த வழக்கத்தை தன்னுடைய படங்களில் இருந்து ஒதுக்கி வைத்துவிட்டார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் “O2”. இப்பொது திருமணம் முடிந்த பின்னர் மலையாளத்தில் கோல்டு, இந்தியில் ஜவான், தமிழில் இறைவன், கனெக்ட், தெலுங்கில் காட் ஃபாதர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பை இன்று காலை 11 மணிக்கு வெளியிட அதை தயாரித்து வரும் தயாரிப்பு நிறுவனம் “ட்ரிடன்ட் ஆர்ட்ஸ்” மற்றும் “ஜீ ஸ்டுடியோஸ்” கான்செப்ட் போஸ்டர் வெளியிட்டுள்ளனர். இந்த படம் நடிகை நயன்தாராவின் 75ஆவது படம் என்பதால் நிச்சயம் பெண்கள் முக்கியத்துவ படுத்தும் படமாக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.