உன் மேல இருக்க பாசத்துல சொல்றேன்.. நட்சத்திராவின் திருமணத்தை வாழ்த்திய ஸ்ரீநிதி.. என்ன வாழ்த்து சொல்லியிருக்கிறார்னு பாருங்க

விஜய் டிவியில் ஒளிபரப்பான 7C என்ற தொடரின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீநிதி. இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சில நாடகங்களில் நடித்து வந்தார். வலிமை படம் வெளியானபோது அந்த படம் குறித்து விமர்சனம் செய்தார். இதனால் இவரை அஜீத் ரசிகர்கள் பலரும் ட்ரோல் செய்தனர். இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான ஸ்ரீநிதி, தொடர்ந்து பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தார். சிம்பு தன்னை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சிம்புவின் வீட்டிற்கு முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். பின்னர் தனது நெருங்கிய தோழி நட்சத்திராவை திருமணம் செய்து கொள்ள இருக்கும் நபர் தவறானவர் என்றும், நட்சத்திராவை அடைத்து வைத்துள்ளனர் என்றும், அந்த நபரை திருமணம் செய்து கொண்டால் நட்சத்திராவிற்கு விஜே சித்ராவின் நிலைமை தான் என்றும் அவர் கூறியிருந்தார். எப்படியாவது என் தோழி நட்சத்திராவை காப்பாற்ற வேண்டும் என்று ஒரு லைவ் வீடியோவில் ஸ்ரீநிதி பேசினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உன் மேல இருக்க பாசத்துல சொல்றேன்.. நட்சத்திராவின் திருமணத்தை வாழ்த்திய ஸ்ரீநிதி.. என்ன வாழ்த்து சொல்லியிருக்கிறார்னு பாருங்க 1

விளம்பரம்

இந்த வீடியோ கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதனால் அவரது தோழி நட்சத்திரா தானே ஒரு வீடியோவில் தோன்றி, ஸ்ரீநிதி சொல்வதில் உண்மை இல்லை. என்னை யாரும் அடைத்து வைக்கவில்லை. நானாக விரும்பி தான் அவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறேன். நாங்கள் இருவரும் காதலித்து வருகிறோம். விரைவில் திருமணம் செய்து கொள்வோம் என்று கூறினார். மேலும் ஸ்ரீநிதி சில நாட்களாகவே மன அழுத்தத்தில் இருப்பதால் அவர் இவ்வாறு பேசுகிறார் என்றும் நட்சத்திராவே விளக்கம் அளித்து இருந்தார். இதற்கிடையில் ஸ்ரீநிதிக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்றும் அவரது மனநிலை சரியில்லை என்றும் அவரை மனநல மருத்துவமனையில் சேர்க்க சொல்லியும் இணையதளத்தில் செய்திகள் பரவத் தொடங்கின. இதனால் அவரது அம்மா வேதனையாக பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

தொடர்புடையவை  "கிளைமாக்ஸ் ட்விஸ்டே இவருதான்..முடிவுக்கு வரும் செம்பருத்தி தொடர்"

உன் மேல இருக்க பாசத்துல சொல்றேன்.. நட்சத்திராவின் திருமணத்தை வாழ்த்திய ஸ்ரீநிதி.. என்ன வாழ்த்து சொல்லியிருக்கிறார்னு பாருங்க 3

விளம்பரம்

எனது மகளுக்கு ஒன்றுமில்லை, அவள் சிறிது நாட்களாக மன அழுத்தத்தில் இருக்கிறார், அவளை எப்படியாவது நான் மீட்டுக் கொண்டு வந்துவிடுவேன். தயவுசெய்து என் மகளை யாரும் பைத்தியம் என்று சொல்லாதீர்கள் என்று கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார். சமீபத்தில் ஒரு பதிவில் மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வர அவர் மறுவாழ்வு மையத்தில் சில நாட்கள் தங்கி இருந்ததாகவும் ஸ்ரீநிதியே கூறியிருந்தார். இந்த நிலையில் நட்சத்திராவிற்கு கடந்த வாரம் யாருக்கும் தெரியாமல் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. தனது காதலரை பெற்றோர்கள் மற்றும் உறவினர் முன்னிலையில் அவர் கரம் பிடித்தார். கேரளாவில் பிறந்து வளர்ந்த நட்சத்திரா, ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்ற சீரியலில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். இவரும் ஸ்ரீநிதியும், கயல் நாடகத்தில் வரும் சைத்ரா ரெட்டி மூவரும் நெருங்கிய தோழிகள் ஆவர். இவர்கள் மூவரும் இணைந்து இன்ஸ்டாவில் பல ரீல்ஸ் வீடியோக்கள் செய்து பதிவேற்றி உள்ளனர்.

தொடர்புடையவை  "நீங்களாச்சு பிக்பாஸ் ஆச்சு.! ஆள விடுங்க டா.!" திடீரென பிரதீப் ஆண்டனி போட்ட வைரல் பதிவு.!

உன் மேல இருக்க பாசத்துல சொல்றேன்.. நட்சத்திராவின் திருமணத்தை வாழ்த்திய ஸ்ரீநிதி.. என்ன வாழ்த்து சொல்லியிருக்கிறார்னு பாருங்க 5

விளம்பரம்

இந்த நிலையில் ஸ்ரீநிதி நட்சத்திரத்தின் திருமணம் குறித்து பேசியது சலசலப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது நட்சத்திராவின் திருமண புகைப்படத்தை வெளியிட்டு அவர் வாழ்ந்து ஒன்றை கூறியுள்ளார். அனைத்து மரியாதையும் காதலும், வாழ்க வளமுடன் என்றும் அன்புடன் உங்கள் ஸ்ரீநிதி என்று அவர் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below Video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Little Talks

விளம்பரம்

Leave a Comment