ஜி.எஸ்.டி எளிமைப்படுத்தப்படும்: நிர்மலா நம்பிக்கை!

வணிகம் செய்ய ஏற்ற நாடுகள் பட்டியலில் 14 இடங்கள் முன்னேறி 63வது இடத்தை இந்தியா பிடித்துள்ளதாக உலக வங்கி அறிவித்தது.

சரக்கு மற்றும் சேவை வரி எளிமைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும். வணிகம் செய்ய உகந்த நாடுகள் பட்டியலில் இந்தியா முன்னேற இது வழிவகுக்கும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

உலக வங்கியின் எளிதாக வணிகம் செய்ய உகந்த நாடுகள் பட்டியலை வெளியிட்டது. 190 நாடுகளை உள்ளடக்கிய அதில், இந்தியா 63வது இடத்தை பிடித்தது.

எல்லைகள் கடந்த வணிகம், சொத்துகளை பதிவு செய்தல், வரி மற்றும் மின்சார இணைப்புகள் பெறுவது போன்றவைகள் அளவுகோளாக கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

விளம்பரம்
ஜி.எஸ்.டி எளிமைப்படுத்தப்படும்: நிர்மலா நம்பிக்கை! 1

இதனை தவிர, கடன் பெரும் வசதிகள், முதலீட்டாளரை பாதுகாத்தல், உலக நாடுகளுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துதல் போன்றவைகளும் உள்ளடங்கும்.

எளிமையாக வணிகம் செய்ய உகந்த நாடுகள் பட்டியலில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது குறித்து பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “முதல் 50 இடங்களுக்குள் செல்வதை இலக்காகக் கொண்டு, அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். ஜிஎஸ்டியில் உள்ள சிரமங்களை கண்டறிந்து குறைபாடுகளை சரி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். தற்போது வெளியிட்டப்பட்டுள்ள பட்டியலில் டெல்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்களை மட்டுமே கணக்கிடப்பட்டுள்ளன. ஆனால் நடப்பாண்டில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு ஆகியவையும் இணைத்துக்கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment