பிரபல பின்னணி பாடகர் எஸ் பி சுப்பிரமணியத்தின் மகன்தான் எஸ்பிபி சரண். நடிகர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையாளராக விளங்குகிறார். இவர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. தன்னை யாரும் ரெக்கார்டிங்க்கு அழைப்பதில்லை என்றும், எனக்கு வாய்ப்பு கொடுத்தால் நான் நன்றாக பாடுவேன் என்றும், ஆனால் வாய்ப்பு தருவதற்கு ஏன் தயங்குகிறார்கள் என்பது தெரியவில்லை? என்றும் பேசி உள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இசை துறையில் பிரபல பின்னணி பாடகர் ஆக இருந்தவர் எஸ்பி பாலசுப்ரமணியம். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பழமொழிகளில் ஏழாயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடி சாதனை புரிந்துள்ளார்.

இவரது இளைய மகன் தான் எஸ்பிபி சரண். இவரும் பல படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். அலைபாயுதே படத்தில் வரும் நகிலா நகிலா, பாய்ஸ் படத்தில் ப்ளீஸ் சார், வாரணம் ஆயிரம் படத்தில் ஓ சாந்தி போன்ற படங்களில் பாடியுள்ளார். ஆடுகளம் படத்தில் தனது தந்தையுடன் சேர்ந்து ஐயோ நெஞ்சு அலையுதடி போன்ற பாடல்களையும் பாடியிருக்கிறார். இவர் தற்போது சூப்பர் சிங்கரில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார். சென்னை 28 என்ற படத்தை தயாரித்துள்ளார். 2008ம் ஆண்டு வெளிவந்த சரோஜா என்ற படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் இவர் தயாரித்த ஆரண்ய காண்டம் என்ற படம் 2012 ஆம் ஆண்டிற்கான தேசிய விருதையும் பெற்றது. தற்போது துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியாக உள்ள சீதா ராமம் படத்தில் இரண்டு பாடல்களை பாடியுள்ளார்.

இந்த நிலையில் ஹைதராபாத்தில் பேட்டியளித்த அவர், மக்கள் மெலடி பாடல்களை மட்டுமே நினைவில் வைத்துக் கொள்கிறார்கள் என்றும், குத்துப் பாடல்களை வெளிவந்த சில நாட்கள் மட்டுமே ரசித்துவிட்டு பின்னர் மறந்து விடுகின்றனர் என்றும் கூறினார். தான் பல இசையமைப்பாளர் உடன் பாடியிருக்கிறேன், பல படங்களை பாடியிருக்கிறேன், எல்லாம் பெரிய அளவில் ஹிட்டானது. ரசிகர்களும் என்னை ஆதரித்தனர். தற்போது என்னை யாருமே பாடுவதற்கு அழைப்பதில்லை. அது ஏன் என்று தெரியவில்லை? இது மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது என்று அவர் தனது பேட்டியில் வருத்தம் தெரிவித்தார்.