அ.தி.மு.க., எம். எல். ஏ 125 ஆக உயர்வு! நேற்று பதவியேற்றுக் கொண்ட புதிய அமைச்சர்கள்!

அ.தி.மு.க., எம். எல். ஏ 125 ஆக உயர்வு! நேற்று பதவியேற்றுக் கொண்ட புதிய அமைச்சர்கள்! 1

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. – எம்.எல்.ஏ.க்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். சட்டசபையில் அ.தி.மு.க.விற்கு பலம் 125 ஆக உயர்ந்துள்ளது.விக்கிரவாண்டி நாங்குநேரி சட்டசபை தொகுதிகளில் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் விக்கிரவாண்டியில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்செல்வன், நாங்குநேரியில் அ.தி.மு.க. வேட்பாளர் நாராயணன் ஆகியோர் எம்.எல்.ஏ.க்களாக ஆக்கப்பட்ட நிலையில், அவர்களின் பதவியேற்பு நிகழ்ச்சி நேற்று சென்னை தலைமை செயலகத்தில் நடந்தது. சபாநாயகர் தனபால் இருவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.,க்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

விளம்பரம்

புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்ற பிறகு சபாநாயகர், முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு சால்வை அணிந்து வாழ்த்து பெற்றனர். இரு எம்.எல்.ஏ.க்களும் முதல்வரின் கால்களை தொட்டு வணங்கினர்.

சட்டசபையில் அ.தி.மு.க.விற்கு சபாநாயகருடன் சேர்த்து 123 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். தற்போது இரண்டு எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றதை தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 125 ஆக உயர்ந்துள்ளது. தி.மு.க.விற்கு 100 எம்.எல்.ஏ.க்கள் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரசுக்கு ஏழு மற்றும் முஸ்லிம் லீக்கிற்கு ஒரு எம்.எல்.ஏ. உள்ளனர். சுயேச்சை எம்.எல்.ஏ.வாக தினகரன் இருந்து வருகிறார்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment