தமிழில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் விஷ்ணு விஷால். காமெடி, ரொமான்ஸ், ஆக்ஷன், செண்டிமெண்ட் என அனைத்தும் கனகச்சிதமாக செய்யும் இவர், முன்னணியில் முன்னேறுவதற்கான அதனை திறன்கள் கொண்டுள்ளார் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை. 2009ஆம் ஆண்டு இயக்குனர் சுசீந்திரன், சூரி, கிஷோர் ஆகியோர் அறிமுகமான “வெண்ணிலா கபடி குழு” படத்தின் மூலம் திரைத்துறையில் நாயகனாக அறிமுகமானார்.

முதல் படம் நல்ல வெற்றியாக அமைய, அடுத்தடுத்து தொடர்ந்து நிறைய பட ங்கள் நடித்தாலும் நீர்ப்பறவை, குள்ளநரி கூட்டம், ஜீவா, முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை போன்ற படங்கள் சிறப்பான வெற்றியை இவருக்கு கொடுத்தன. முக்கியமான நேரத்தில் இவர் நடிப்பில் வெளியான “ராட்சசன்” படம் தமிழில் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. இதனை தொடர்நது அண்மையில் வெளியான “எஃப்.ஐ.ஆர்” படமும் நல்ல வெற்றியை பதிவு செய்திருந்தது.

மிகவும் சுறுசுறுப்பாக வளர்ந்து வரும் இவர், தற்போது போட்டோஷூட் ஒன்றால், பெரும் சிக்கலில் மாட்டியுள்ளார். “Bhajirao Mastani, Padmavaat, Simmba” போன்ற தொடர் வெற்றி படங்களை கொடுத்துள்ளவர் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்க் இப்பொது ரொம்பவே கன்றாவியான போட்டோஷூட் ஒன்று நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இது பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. பெண் வழக்கறிஞர் ஒருவர் நிர்வாண போட்டோக்களை பொது வெளியில் பதிவிட்டு சட்டத்தை மீறி உள்ளார் ரன்வீர் சிங் என அவர் மீது மும்பை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க ரன்வீர் சிங் மீது இரண்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

இதனை கருத்தில் கொண்டு தற்போது விஷ்ணு விஷாலும் இது போன்ற போட்டோஷூட் வெளியிட்டுள்ளதால், சென்னையிலும் அவர் மேல் வழக்குகள் பதியப்படக்கூடும் என வலுவாக பேசப்பட்டு வருகிறது. இது சினிமா ரசிகர்களை கொஞ்சம் சோகத்தில் தான் ஆழ்த்தியுள்ளது. routine commercial படங்கள் நடித்துவரும் நடிகர்கள் மத்தியில் கொஞ்சம் வேறுபட்ட படங்களை தொடர்ந்து தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஷ்ணு விஷால் இவ்வாறான செயலால் அவருடைய மவுசு மக்களிடம் குறையக்கூடும் என பேசிவருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது விஷ்னு விஷால் அளித்திருக்கும் பேட்டியில் தான் எதற்காக அந்த போட்டோக்களை பகிர்ந்தேன் என விளக்கமளித்து இருக்கிறார். “அது ஒன்றும் நீங்கள் நினைக்குற மாதிரி போட்டோஷூட் இல்லை, சாதாரணமாக தூங்கி எழுந்ததும் எடுத்த போட்டோ. என் உடற்கட்டு நன்றாக இருந்ததால் எடுத்தேன். குழப்பத்தில் இருந்த போது ரன்வீர் சிங், விஜய் தேவரகொண்டா ஆகியோர் நிர்வாண போட்டோ வெளியிட்டனர். ஆகையால் தான் நானும் ரிலீஸ் செய்தேன். என்னாலும் அப்படிப்பட்ட படங்களில் நடிக்க முடியும் என ஒரு perception இருக்கிறது. அதை உடைக்க தான் இப்படி போட்டோக்கள் வெளியிட்டேன்” என விஷ்ணு விஷால் விளக்கம் கூறி தான் செய்ததை நியாயப்படுத்த முயல்கிறார்.