நடிகர் தனுஷ் இன்று இந்திய முழுவதும் அறியப்படும் நடிகராக இருக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் நடித்து வரும் தனுஷ் நடிப்பில் நேற்று ஹாலிவுட்டில் “தி கிரே மேன்” படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்பொது இவர் நடிப்பில் மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் “திருச்சிற்றம்பலம்” செல்வராகவன் இயக்கத்தில் “நானே வருவேன்”, தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூறி இயக்கத்தில் “வாத்தி” போன்ற படங்கள் தயாராகி வருகின்றன.

அண்மையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் “கேப்டன் மில்லர்” என்ற படமும் அறிவிவிக்கப்பட்டுள்ளது. படு பிஸியாக நடித்து வரும் தனுஷ் தான் நடிக்கும் படங்களில் பாடல்கள் எழுதியும், சில பாடல்கள் பாடியும் வருகிறார். அந்த வகையில் இப்பொது நடிகர் தனுஷ், ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா என பலர் நடித்துள்ள “திருச்சிற்றம்பலம்” படம் வருகிற ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த படத்தில் 5 வருடங்கள் இடைவேளைக்கு பிறகு தனுஷ் மற்றும் அனிருத் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளன. இருவருமே இசைத்துறையில் மிக பெரிய ஹிட் பாடல்கள் கொடுத்துள்ளனர். இதனாலேயே இந்த படத்தின் மீது மிகவும் எதிர்பார்ப்புகள் உள்ளது. முதல் பாடல் “தாய் கிழவி” பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இன்று அவரின் 39வது பிறந்தநாளை முன்னிட்டு பலரும் தங்களது வாழ்த்துக்களை இவருக்கு தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக திரைத்துறை பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். நடிகர் பிரசன்னாவும் தன்னுடைய வாழ்த்தை அவருக்கு தெரிவித்து உள்ளார். ட்விட்டர் பக்கத்தில் நடிகர் தனுஷ் கீ-போர்டு வசிக்கும் யாருக்கும் பார்க்காத விடியோவை பகிர்ந்து அவர் தன்னுடைய வாழ்த்தினை தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இப்பொது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Wishing only greater heights and even greater happiness to my dear bro @dhanushkraja ❤️💐 and what more beautiful can u share to his fans on his birthday…🤩 bro don't kill me for sharing this. I kept it too long for just myself 🥰 pic.twitter.com/jU0eWffhkK
— Prasanna (@Prasanna_actor) July 28, 2022