
ஒரு ஒரு இயக்குனருக்கும் என ஒரு தனி பாணி இருக்கும். சிலர் ஆக்ஷன் படங்கள், சிலர் குடும்ப படங்கள், சிலர் புதுவிதமான கதைக்களங்களில் படங்கள், சிலர் காதல் படங்கள் என ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு தனி மேக்கிங் ஸ்டைல் இருக்கும். பெருமபாலும் நம் ஊர்களில் ஆக்ஷன் கலந்த மசாலா கம்ர்சியல் படங்களே வெற்றி பெரும். ஆனால் நிறைய பேர் பேசியுள்ள காதல் கதைகளிலேயே புதுவிதமாக சொல்லி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று முன்னணி இயக்குனராக இருப்பவர் கௌதம் வாசுதேவ் மேனன்.

காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் போன்ற ஆக்ஷன், எதார்த்த படங்கள் இயக்கி அவர் வெற்றி கண்டிருந்தாலும் ரசிகர்களுக்கு அவர் இயக்கிய மின்னலே, விண்ணைதாண்டி வருவாயா போன்ற படங்களே மிகவும் பிடித்தமான படங்களாக உள்ளன. அவர் இயக்கிய ஆக்ஷன் படங்களில் கூட ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்ட காட்சிகள் என்றால் அது காதல் காட்சிகளே.

2001ஆம் ஆண்டு மாதவன், நாகேஷ், விவேக், ரீமா சென் நடிப்பில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான “மின்னலே” படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் கவுதம். இந்த படம் மூலம் தான் ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் ரீமா சென்னும் அறிமுகமானார்கள். படம் வெளியாகி மிக பெரிய வெற்றியை பெற்றது. அடுத்து சூர்யாவுடன் “காக்க காக்க” படம். நடிகர் சூர்யாவின் வாழ்வில் மிக முக்கிய மைக்கல் இந்த படம். இதுவும் வெற்றிபெறுவவே அடுத்தடுத்து “பச்சைக்கிளி முத்துச்சரம்”, “வேட்டையாடு விளையாடு”, “வாரணம் ஆயிரம்” , “விண்ணைதாண்டி வருவாயா”, “என்னை அறிந்தால்” என தொடர் வெற்றி படங்களே.

இவர் அடுத்து சிம்புவின் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் “வெந்து தணிந்த்து காடு” படம் இயக்கி முடித்துள்ளார். 3வது முறையாக இந்த கூட்டணி “விண்ணைதாண்டி வருவாயா” மற்றும் “அச்சம் என்பது மடமையடா” என படங்களில் பணியாற்றி வெற்றி கூட்டணியாகவே உள்ளனர். இப்பொது மீண்டும் 3வரும் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதி எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்த படம் வரும் செப்டம்பர் 15ஆம் ஆண்டு வெளியாகும் பாட்சத்தில் அடுத்து கவுதம் வாசுதேவ் மேனன் என்ன படம் எடுக்க போகிறார் என்ற கேள்விகள் நிலவிய நிலையில், அதற்கு அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதில் கொடுத்துள்ளார். கவுதம் – சீயான் விக்ரம் கூட்டணயில் உருவான படம் “துருவ நட்சத்திரம்”. நீண்ட ஆண்டுகள் முன்பே துவங்கப்பட்ட இந்த படத்தின் வேலைகளில் நிறையவே முடிவடைந்து, திடீரென காரணம் வெளிவராமல் நின்று போனது. இந்த படத்திலிருந்து வெளியான டீசர்கள் மிக சிறப்பான வரவேற்பை மக்களிடம் பெற்று இருந்தது. ஆனால் காரணம் இல்லாமல் நின்று போன இந்த படம் குறித்து ரசிகர்கள் படம் எப்போது எப்போது என கேள்விகள் வைத்து கொண்டே இருந்தனர்.

இப்பொது இந்த படம் மீண்டும் துவங்கும் என மறைமுகமாக கவுதம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் சீயான் விக்ரமை நேரில் சந்தித்த புகைப்படத்தை வெளியிட்டு, “the stars will align” என பதிவிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் பெரும் அளவில் பகிர்ந்து வருகிறார்கள். படத்தில் சீயான் விக்ரமுடன், ரித்து வர்மா, சிம்ரன், திவ்யதர்ஷினி, பார்த்திபன் என பலர் நடித்துள்ளனர்.
