இரண்டு நாட்களுக்கு வெளுத்து வாங்க போகும் போகும் மழை!!

இரண்டு நாட்களுக்கு வெளுத்து வாங்க போகும் போகும் மழை!! 1

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகளவு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

கடந்த வாரத்தில் குமரிக் கடல் பகுதியில் ‘மஹா புயல்’ உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென்மேற்கு வங்கக் கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது அடுத்த 3 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்கும்.

விளம்பரம்

இதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தென் மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புண்டு என தெரிவித்தார். சென்னையை பொறுத்த மட்டில் அடுத்த 2, 3 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு பெரிதாக வாய்ப்புகள் இல்லை.

தொடர்புடையவை  கோழிக்கறி சமைக்க சென்ற மனைவியை, கணவன் கிச்சனில் வைத்து கொன்ற கொடூரம்!!

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால், பலத்த காற்று வீசக்கூடும்.எனவே 4, 5 தேதிகளில் அந்தமான் கடல் பகுதிக்கும், 6, 7, 8 ஆகிய தேதிகளில் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிக்கும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை சூலூர், ராஜபாளையத்தில் தலா 6 செ.மீ மழை பதிவாகி இருந்தது. டெல்லியில் காற்று மாசுபாடு அதிகமாக இருக்கிறது. இது தமிழகத்தை நோக்கி வருவதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment