சன் டிவி ரோஜா சீரியலின் கதாநாயகன் சிபு சூரியன் தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் மெகா தொடர்களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதில் பல ரசிகர்களைக் கொண்ட ஒரு சீரியல் என்றால் அது ரோஜா தான். இந்த சீரியல் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கர்நாடகாவை சேர்ந்த சிபு சூரியன் அர்ஜுன் என்ற கதாபாத்திரத்திலும், பிரியங்கா நல்காரி ரோஜா கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். மேலும் இந்த நாடகத்தில் வடிவுக்கரசி, மெட்டி ஒலி காயத்ரி, டாக்டர் ஷர்மிளா போன்ற பல முன்னணி நடிகர்களும் நடித்து வருகின்றனர். இந்தத் தொடர் 1200 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நாடகத்தின் விறுவிறுப்புக்கு முக்கிய காரணமாக இருப்பவர்கள் சிபு சூரியனும் பிரியங்கா நல்காரியும் தான். அர்ஜுன் மற்றும் ரோஜாவாக இவர்கள் இருவரும் செய்யும் ரொமான்ஸ் சீனுக்காகவே இவர்கள் இருவரையும் ரசிக்க தனி பெரும் கூட்டமே இருக்கிறது. இவர்களின் காட்சிகள் வரும்போது அந்த வாரம் டிஆர்பி ரேட்டிங் ஏறுவதும், இவர்கள் காட்சிகள் காட்டப்படாத நாட்களில் டிஆர்பி ரேட்டிங் சரிவை சந்திப்பதும் உண்மை. சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சிபு அடிக்கடி உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை பதிவேற்றி வருவது வழக்கம். இந்த நிலையில் திடீரென ஒரு நாள் வேறு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்ததால் ரோஜா சீரியலை விட்டு விலகுவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார் சிபு. ஆனால் இந்த அறிவுக்கு பின்னர் பலரும் அவருக்கு விலக வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்க தனது முடிவை மாற்றிக் கொண்டு ரோஜா சீரியலிலேயே தொடர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த வருடம் சிபுசூரியனுக்கு திருமணம் ஆனது. கடந்த மாதம் இவருக்கு ஆண் குழந்தை பிறந்ததாக தகவல் வெளியானது. இதனால் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறியிருந்தனர். ஆனால் மகனின் புகைப்படத்தை சிபு சூரியன் வெளியிடவில்லை. இந்த நிலையில் இன்று அவர் தனது மகனின் கையை பிடித்து இருப்பது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்த போட்டோவிற்கு லைக் குவிந்து வருகிறது. மேலும் நாம் ஒன்றாக இருந்தால் சிறப்பாக இருக்கும், இது தந்தைக்கும் மகனுக்கும் இடையில் உள்ள மேஜிக்கல் பாண்ட் என்று பதிவிட்டுள்ளார் சிபுசூரியன்.
