500 க்கு மேற்பட்ட சிறுவர்கள் நிலை என்ன? உச்ச நீதிமன்றம் கேள்வி!!

500 க்கு மேற்பட்ட சிறுவர்கள் நிலை என்ன? உச்ச நீதிமன்றம் கேள்வி!! 1

அரசியலமைப்பு சட்டப்பிரிவின் கீழ் 370 ஐ ரத்து செய்து ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இந்த நடவடிக்க்கையின் போது பாதுகாப்பு படையினரால் 500க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள இந்த சிறுவர்களின் நிலை என்ன என்பது பற்றி விசாரிக்குமாறு, ஐம்மு காஷ்மீர் உயர் நீதி மன்றத்தின் சிறார் நீதிக்குழுவினருக்கு, உச்ச நீதிமன்றத்தின் சார்பில் உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு – காஷ்மீரில், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு , பாதுகாப்பு படை மூலம் கைது செய்யப்பட்டதை குறித்து ஒரு பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில்
இந்த மனுவானது, நீதிபதி என்.வி.ரமணாவின் தலைமையிலான அமர்வின் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீதான விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், ஜம்மு – காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின், சிறார் நீதிக் குழுவுக்கு ( Juvenile Justice ) நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது,

விளம்பரம்
தொடர்புடையவை  நகை கடை வழக்கு! குற்றவியல் நீதிமன்றத்தில் மணிகண்டன் மற்றும் கனகவல்லி!!

சிறப்பு அந்தஸ்து நீக்கம் செய்யப் பட்ட பின், ஜம்மு – காஷ்மீரில், பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டிருக்கும் சிறுவர்களின் நிலை தற்போது என்ன என்பதைப் பற்றி விசாரிக்க வேண்டும். அந்த விசாரணை தொடர்பான அறிக்கையை, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் இந்த மனு மீதான விசாரணையை, டிசம்பர் மாதம் 3 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

விளம்பரம்

Leave a Comment