ஸ்டாலின் பற்றி பேசியதை தவறாக புரிந்து கொண்டனர்…மாஃபா பாண்டியராஜன் பேட்டி!

ஸ்டாலின் பற்றி பேசியதை தவறாக புரிந்து கொண்டனர்...மாஃபா பாண்டியராஜன் பேட்டி! 1

திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து நான் பேசியது தவறாக புரிந்து கொண்டனர் என்றும் , அவருக்கு நன்றி என்றும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்து இருக்கிறார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் மிசா சட்டத்தின் கீழ் திமுக தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இது தொடர்பாக தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து தெரிவித்திருந்தார்.

மாஃபா பாண்டியராஜன் தனது பேச்சில், ஸ்டாலின் மிசாவின் காரணமாக கைது செய்யப்படவில்லை, மிசா இருந்த நேரத்தில் தான் அவர் கைதானார். அவரை அடித்ததாக கூறப்படுகிறது . ஆனால் அவரை மிசாவிற்காக அடிக்கவில்லை. அவர் மோசமான வழக்கில் சிறைக்கு சென்றதன் காரணமாக அடித்து உள்ளனர்.

விளம்பரம்

அவருக்கும் மிசாவிற்கும் தொடர்பு கிடையாது. அவர் மிசாவில் சென்றதாக மக்களை ஏமாற்றுகிறார். அவர் பாலியல் வழக்கில்தான் சிறை சென்றார். அதை மக்களுக்கு தெரியாமல் மறைகிறார், என்று மாஃபா பாண்டியராஜன் குறிப்பிட்டு இருந்தார். மாஃபா பாண்டியராஜன் அளித்த இந்த பேட்டியின் காரணமாக திமுகவினர் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து சென்னையில் மாஃபா பாண்டியராஜனுக்கு எதிராக திமுக கட்சியினர் போராட்டம் நடத்தி உள்ளனர்.

தொடர்புடையவை  வேலையின்மை பா.ஜ.க. ஆட்சியில் தொற்று நோய் பரவி வருகிறது! பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!!

சென்னை மற்றும் திருவள்ளுவர் மாவட்ட திமுகவினர் சென்னையில் பல இடங்களில் போராட்டம் நடத்தினார்கள்.இதற்கு மாஃபா பாண்டியராஜன் தற்போது நன்றி தெரிவித்துள்ளார். அதில், எனக்கு எதிரான போராட்டத்தை திமுகவினர் தவிர்க்க வேண்டும் எனக் கூறிய ஸ்டாலினுக்கு நன்றி. ஸ்டாலின் பற்றி நான் பேசியதில் சில தவறான புரிதல்கள் ஏற்பட்டிருக்கின்றன என்று தெரிவித்தார்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment