
காஷ்மீரில் குளிர்காலம் தொடங்கியதையடுத்து பல மாவட்டங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. காஷ்மீரின் பிர் பாஞ்சால் மலைகளில் ஏற்பட்டுள்ள பனிப்பொழிவின் காரணமாக மொகல் சாலை மூடப்பட்டு விட்டன. மேலும் காஷ்மீரின் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.
இந்நிலையில் நேற்று டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் வரை செல்ல இருந்த 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளனமோசமான வானிலை காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
விளம்பரம்
ஜம்மு-காஷ்மீரில் பனிப்பொழிவின் காரணமாக வெவ்வேறு சம்பவங்களில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்