2007 ஆம் ஆண்டு ஒளிபரப்பான அரசி என்ற நாடகத்தின் மூலமாக சின்னத்திரையில் அடி எடுத்து வைத்தவர் மகாலட்சுமி. இவர் அதற்கு முன்பாக சன்மியூசிக்கில் தொகுப்பாளனியாக வேலை பார்த்து வந்தார். பின்னர் இவருக்கு சின்னத்திரை நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வில்லி கதாபாத்திரங்கள், துணை வேடங்கள் என்று பல நாடகங்களில் நடித்து அசத்தியிருக்கிறார் மகாலட்சுமி. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆகியிருந்தது. இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். பின்னர் ஜீ தமிழில் ஒரு நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது இவருக்கும், நடிகர் ஈஸ்வருக்கும் காதல் மலர்ந்ததாக அப்போது கூறப்பட்டது. அது பெரிய பிரச்சினையாக வெடித்தது. ஈஸ்வரின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஈஸ்வரும் மகாலட்சுமியும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் அவர் ஆதாரமாக காட்டினார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

ஆனால் மகாலட்சுமி ஈஸ்வரின் மனைவி கூறிய கருத்துக்களை மறுத்தார். தாங்கள் இருவரும் நண்பர்களாகத்தான் பழகி வருகிறோம் என்று விளக்கம் அளித்து பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். பிறகு இந்த சர்ச்சைகளில் இருந்து நாம் விலகி இருந்த அவர், மீண்டும் சன் டிவியில் சித்தி 2வில் நடித்து வந்தார். இந்த நிலையில் திடீரென அவருக்கும் தயாரிப்பாளர் ரவீந்தருக்கும் காதல் மலர்ந்ததாகவும், ஒன்றரை வருடங்களாக காதலித்து வந்ததாகவும் கூறி இருவரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி திருப்பதி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது. இதை தயாரிப்பாளர் ரவீந்திரனே தனது சோசியல் மீடியா பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக பகிர்ந்து இருந்தார். அன்று தொடங்கி இன்று வரை இருவரும் பல சேனல்களில் பேட்டி அளித்து வருகின்றனர். பணத்திற்காகத்தான் இவரை திருமணம் செய்து கொண்டீர்களா? என்று நெட்டிசன்கள் கேட்ட கேள்விக்கு இல்லை என்ற பதிலையே அளித்திருந்தார், தான் அவரின் மனதை பார்த்து தான் திருமணம் செய்து கொண்டதாக மஹாலெட்சுமி கூறினார்.

ஆனாலும் தொடர்ந்து விமர்சனங்கள் வந்த வண்ணமே இருக்கின்றன. குறிப்பாக ரவீந்தரை பார்த்து உருவக் கேலி செய்வது குறையாமல் இருக்கிறது, பிரபல நியூஸ் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது கூட இவ்வளவு கருப்பாக குண்டாக இருக்கும் நபரை ஏழையாக இருந்தால் திருமணம் செய்து இருப்பீர்களா என்று கடுமையான கேள்விகள் மகாலட்சுமியிடம் கேட்கப்பட்டது. ஆனால் அதற்கெல்லாம் அவர் கூலாக தான் பதில் அளித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மகாலட்சுமி ரவீந்திரன் இருவரும் லைவில் வந்தனர். அப்போது கடுப்பான மகாலட்சுமி நாங்கள் வாழ்ந்து காட்டுவோம், இது எங்களது வாழ்க்கை. யாரையும் உருவக்கேலி செய்யாதீர்கள், உங்கள் வீட்டில் ஒருவர் இப்படி இருந்தால் உருவக்கேலி செய்வீர்களா? போன்ற சில கேள்விகளை கேட்டுவிட்டு கோபத்தில் லைவிலிருந்து விலகி சென்று விட்டார். ரவீந்திரன் பலமுறை அழைத்தும் அவர் லைவில் பேச மறுத்துவிட்டார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..