ஆகஸ்ட் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 3.21% ஆக உயர்வு!

ஆகஸ்ட் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 3.21% ஆக உயர்வு! 1

இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் சில்லறை பணவீக்கம் பத்து மாத உயர்வான 3.21 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆனால் இந்திய ரிசர்வ் வங்கியின் 4% நடுத்தர கால இலக்கை விட குறைவாகவே இருப்பதால் அடுத்த மாதம் மற்றொரு விகிதக் குறைப்புக்கான எதிர்பார்ப்புகளை வலுப்படுத்துகிறது.

காய்கறிகள், இறைச்சி. மீன்கள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற உணவுப் பொருட்களின் அதிக விலையே சில்லறை பணவீக்கம் உயர்வுக்கு காரணமாகவும் இருக்கிறது.

விளம்பரம்

இந்தியாவில் பணவீக்கம் ஜூலை மாதத்தில் 3.15% ஆகவும் ஆகஸ்ட் 2018 இல் 3.69% ஆகவும் இருந்ததாக நுகர்வோர் விலைக் குறியீட்டை அடிப்படையாகக் கொண்டு கண்டறியப்பட்டது. பணவீக்கம் உணவுக் கூடையில் 2.99% ஆகவும் ஜூலையில் 2.36% ஆகவும், இறைச்சி மற்றும் மீன் கூடைகளில் 8.51% ஆகவும், காய்கறிகள் 6.9% ஆகவும், பருப்பு வகைகள் மற்றும் பொருட்களில் 6.94% ஆகவும் ஆரோக்கியத்தில் 7.84% ஆகவும், தனிப்பட்ட பராமரிப்பு மற்றும் விளைவுகள் 6.38% ஆகவும், பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கையில் 5.54% ஆகவும் இருந்ததாக பதிவாகியுள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் கல்வி பிரிவில் பணவீக்கம் 6.1% ஆக பதிவாகி உள்ளது.

தொடர்புடையவை  இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன்...! முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?

முக்கியமாக காய்கறி, மீன்கள், இறைச்சி, பருப்பு வகைகள், உணவுப் பொருட்கள், கல்வி, சுகாதாரம் மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு மற்றும் விளைவுகள் அனைத்தும் சில்லறை பணவீக்கத்தை தீர்மானிக்கின்றது.

விளம்பரம்

நாட்டின் பணவீக்கம் அதிகமாக இருந்ததால் விலைவாசி உயர்ந்துவிடும். குறைவாக இருந்தால் வளர்ச்சியில் தொய்வு ஏற்படும். சிரியான அளவில் இருந்தால் மட்டுமே நாட்டின் பொருளாதாரம் நன்றாக வளர்ச்சி அடையும்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment