பிக்பாஸ் சீசன் 6 துவங்க இருப்பதால் விஜய் டிவி சில சீரியல்களை முடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் 100 நாட்கள் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி வருகிற அக்டோபர் 2ம் தேதி துவங்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் யார் என்பது குறித்த தகவல்களும் அவ்வப்போது வெளியாகி வருகிறது. பிக்பாஸ் ஐந்து சீசன்களை கமலஹாசனே தொகுத்து வழங்கி வந்தார். பின்னர் ஓடிடி தளத்தில் வெளியான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை பாதி நாட்கள் அவரை தொகுத்து வழங்கி வந்தார். பின்னர் விக்ரம் படம் ஷூட்டிங் காரணமாக அவர் பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.

தற்போது பிக் பாஸ் சீசன் 6 பிரம்மாண்டமாக துவங்க இருக்கிறது இதில் குக் வித் கோமாளி புகழ் ரக்ஷன் தர்ஷா குப்தா, சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி, சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி, தொகுப்பாளினி டிடி போன்ற பலர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பிக்பாஸ்க்கு நேரம் ஒதுக்குவதற்காக விஜய் டிவி சில சீரியல்களை முடிக்க உள்ளதாக தெரிகிறது. பிக்பாஸ் எப்போதுமே இரவு 10 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பாகும். எனவே தற்போது வெளியான தகவலின்படி மதியம் ஒளிபரப்பாகும் இரண்டு சீரியல்களை விஜய் டிவி முடிக்க திட்டமிட்டுள்ளது.

ஒன்று பாவம் கணேசன், இதில் ஹீரோயினாக வரும் நேஹா கன்னட பிக்பாஸுக்கு சென்றுள்ளதாலும், டி.ஆர்.பி ரேட்டிங்கில் சில காலமாக அடி வாங்கியதாலும் அந்த கதையை முடிக்க உள்ளதாக தெரிகிறது. அடுத்த கதையாக சிப்பிக்குள் முத்து சீரியலையும் முடிக்க இருப்பதாக தெரிகிறது. இந்த தொடரில் மனநலம் பாதிக்கப்பட்ட ஹீரோ, தற்போது மனநலம் குணமாகி வந்துவிட்டார். அவரது மனைவி மற்றும் குழந்தைகளையும் அவர் கண்டுபிடித்துவிட்டார். எனவே அந்த சீரியலும் முடிய இருப்பதாக தெரிகிறது. மேலும் பாரதி கண்ணம்மா சீரியலும் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டு இருப்பது போல காட்டப்படுவதால் அந்த சீரியலும் முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
