பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அடுத்தடுத்த திருப்பங்கள் நடந்து வருகிறது. தனது கனவில் வந்து தாயார் இந்த வீட்டை விற்றுவிட்டு வேறு இடம் வாங்கிக் கொள்ளுமாறு கூறியதால், மூர்த்தி இந்த வீட்டை விற்பதற்காக முயற்சிகள் செய்து வருகிறார். ஆனால் வீடு வாங்க வரும் யாருமே வீட்டை வாங்குவதாக தெரியவில்லை. இதனால் மீனாவின் அப்பா மற்றவர்கள் கொடுக்கும் பணத்தில் இருந்து கூட கொடுத்து, தானே இந்த வீட்டை வாங்கிக் கொள்வதாக கூறுகிறார். இதற்கு மூர்த்தி பலமுறை யோசிக்கிறார். ஆனால் மீனா மூர்த்தியை கட்டாயப்படுத்தி தனது தந்தையிடமே இந்த வீட்டை விற்கும்படி செய்து விடுகிறார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

வீட்டை விற்க சென்க இடத்தில் மீனாவின் தந்தை ஒரு அதிர்ச்சியை கொடுக்கிறார். அதாவது தன் பெயரில் வாங்குவதாக முதலில் கூறிவிட்டு, பின்னர் மீனாவின் பெயரிலேயே இந்த வீட்டை வாங்குகிறார். இந்த விஷயம் மீனாவுக்கே தெரியாது. ஆனால் வீட்டில் உள்ள அனைவருமே மீனா திட்டமிட்டு, இதுபோல் செய்து விட்டதாக நினைத்து வருத்தப்படுகின்றனர். ஆனால் மீனா தனது தந்தை செய்தது குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என்று மீண்டும் மீண்டும் விளக்கம் அளித்து விட்டார். இறந்தபோதிலும் ஐஸ்வர்யா அவ்வப்போது அதை குத்தி காட்டிக் கொண்டே இருக்கிறார். புது வீடு கட்டிக் கொண்டு செல்லும் வரை இந்த வீட்டிலேயே இருப்பதற்கும் மீனாவின் தந்தை அனுமதி அளித்திருக்கிறார்.

தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், வீட்டை விற்ற உடனேயே பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டிற்கு வருகிறார் மீனாவின் அப்பா. அங்கு வீட்டை பார்த்துவிட்டு இதெல்லாம் இத்து போய் கிடக்கிறது என்று ஏளனமாக பேசுகிறார். இந்த இந்த வீட்டில் எப்படித்தான் இவ்வளவு நாள் இருந்திர்களோ என்று மூர்த்தி மற்றும் ஜீவாவை வைத்துக் கொண்டு மிகவும் ஏளனமாக பேசுகிறார். மேலும் ஆட்களை அழைத்து வந்து இந்த இடத்தை சரி செய்யுங்கள் என்றும் உத்தரவிடுகிறார். வேலையாட்கள் சிலர் வீட்டின் நடுவில் அமர்ந்து கொண்டு வெற்றிலை போட்டு நடு வீட்டில் துப்பிக் கொண்டிருக்கின்றனர். இதை பார்த்த தனம் கோபப்படுகிறார். இந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமாவை காண.. Watch the below video..
Youtube Video Code Embed Credits: Vijay Television