குஷ்பூ பிறந்தநாளுக்காக வேற லெவல் சர்ப்ரைஸ் செய்த சுந்தர் சி. அழகிய வீடியோவை பதிவிட்ட குஷ்பூ

குஷ்பூவின் பிறந்த நாளுக்காக அவரது கணவர் சுந்தர் சி மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்துள்ளார். என் கணவர் ரொமான்டிக் ஆன ஆள் இல்லை என்று குஷ்பூ கூறிய நிலையில் நானும் ரொமான்டிக் ஆன ஆள் தான் என்று புகைப்படத்தை பகிர்ந்து இன்ஸ்டகிராமில் பதிவொன்றை போட்டுள்ளார் சுந்தர் சி. 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கியவர் நடிகை குஷ்பூ. 1989 ஆம் ஆண்டு “வருஷம் 16” என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார்.

குஷ்பூ பிறந்தநாளுக்காக வேற லெவல் சர்ப்ரைஸ் செய்த சுந்தர் சி. அழகிய வீடியோவை பதிவிட்ட குஷ்பூ 1

விளம்பரம்

பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சியை மணந்தார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். தன் கணவர் சுந்தர். சி கதாநாயகனாக நடிக்கும் படங்களை “அவ்னி சினிமாக்ஸ்” என்ற படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். தற்போது அவர் தனது கணவர் சுந்தர் சி யின் தயாரிப்பில் உருவாகியுள்ள காபி வித் காதல் என்னும் திரைப்படத்தையும் தனது அவ்னி சினி மேக்ஸ் நிறுவனத்தின் மூலமாகவே தயாரித்திருக்கிறார். இந்த நிலையில் குஷ்பூவின் பிறந்த நாளுக்காக அவரை வெளிநாட்டுக்கு டூருக்கு அழைத்து சென்றுள்ளார் சுந்தர் சி.

தொடர்புடையவை  அயலான் படம் ரிலீஸ் ஆகும் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்த படக்குழு.! எப்போன்னு தெரியுமா?

குஷ்பூ பிறந்தநாளுக்காக வேற லெவல் சர்ப்ரைஸ் செய்த சுந்தர் சி. அழகிய வீடியோவை பதிவிட்ட குஷ்பூ 3

விளம்பரம்

அந்த புகைபடங்களை பகிர்ந்து, என் ரொமான்டிக் இல்லாத கணவர், தனது ரொமான்டிக்பக்கத்தை நிரூபிக்க முடிவு செய்து, எனது பிறந்தநாளைக் கொண்டாட என்னை வெளிநாடு அழைத்து வந்துள்ளார். மகர ராசி + கும்ப ராசிக்காரர்கள் தங்கள் ரொமான்டிக் பக்கத்தைக் காட்டுவதில்லை என்று யார் சொன்னது? இவற்றில்தான் நினைவுகள் உருவாகின்றன. என்று வெளிநாட்டில் இருக்கும் வீடியோவை பகிர்ந்து இருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Kushboo Sundar (@khushsundar)

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment