மீண்டும் இணைந்து வாழ முடிவெடுத்த தனுஷ் ஐஸ்வர்யா? ரசிகர்களுக்கு குட் நியூஸ்

கடந்த ஜனவரி மாதம் தங்கள் இருவரும் பிரிந்து விட்டதாக அறிவித்த நிலையில் தனுஷும் ஐஸ்வர்யாவும் தற்போது மீண்டும் இணைந்துள்ள செய்தி கிடைத்திருக்கிறது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் நடந்த சமரசத்தின் போது அவர்கள் இருவரும் விவாகரத்து வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது தமிழகத்தின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த் இவருக்கு இரண்டு மகள்கள் மூத்த மகள் ஐஸ்வர்யா இளைய மகள் சௌந்தர்யா ஐஸ்வர்யாவை கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார் தனுஷ் இவர்களின் காதலுக்கு பல தடைகள் இருந்தது ஆனால் தடைகள் அனைத்தையும் உடைத்து திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு யாத்ரா லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

மீண்டும் இணைந்து வாழ முடிவெடுத்த தனுஷ் ஐஸ்வர்யா? ரசிகர்களுக்கு குட் நியூஸ் 1

விளம்பரம்

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் தனது சோசியல் மீடியா பக்கத்தில் தானும் ஐஸ்வர்யாவும் தெரிந்து விட்டதாக தனுஷ் அறிவித்திருந்தார் மேலும் அவர் தனது நல்ல தோழியாக தொடர்வார் என்றும் அறிவித்திருந்தார் அதன் பின்னர் ஐஸ்வர்யாவிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டும் உடல்நிலை குன்றியும் அவர் இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் ஐஸ்வர்யாவை சென்று தனுஷ் பார்க்கவில்லை ஆனால் தனது மகன்களை மட்டும் அவ்வபோது தந்தையை பார்க்க அனுப்பி வைத்திருந்தார் ஐஸ்வர்யா சமீபத்தில் கூட மகன் யாத்ராவின் பள்ளியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்காக இருவரும் ஒன்றாக சேர்ந்திருந்தனர். எட்டு மாதங்களுக்குப் பின்பு அவர்கள் முதன்முறையாக பொதுவெளியில் சேர்ந்து வந்தது அந்த நிகழ்ச்சியில் தான்.

தொடர்புடையவை  கதிருக்காக ஹோட்டலுக்கு வந்த மூர்த்தி.! கண்கலங்க வச்சிட்டீங்கப்பா..அண்ணன் தம்பிங்கன்னா இப்படி இருக்கணும்

மீண்டும் இணைந்து வாழ முடிவெடுத்த தனுஷ் ஐஸ்வர்யா? ரசிகர்களுக்கு குட் நியூஸ் 3

விளம்பரம்

மேலும் ஐஸ்வர்யா தன் பெயருக்கு பின்னால் இருந்த தனுஷணிக்கு தனது தந்தை பெயரையும் சேர்த்து இருந்தார் அதன்பின்னர் இவர்களின் விவாகரத்து குறித்து இரு தரப்பினரும் எந்தவித கருத்தையும் வெளிகாட்டாமல் இருந்து வந்தனர் சமீபத்தில் தனுஷின் அப்பாவிடம் இது குறித்து கேட்டபோது அவர் கோபமாக பதில் அளிக்காமல் சென்றார் ஆனால் தற்போது தனுஷ் மற்றும் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு நல்ல தகவல் கிடைத்துள்ளது ரஜினிகாந்தின் வீட்டில் இரு குடும்பத்தினரின் சந்திப்பு நடைபெற்றுள்ளது அப்போது சமரச பேச்சுவார்த்தையில் விவாகரத்து முடிவை தற்காலிகமாக கைவிடுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது ஆனால் இந்த தகவலின் உண்மை தன்மையை இரு குடும்பத்தினர் உறுதிப்படுத்தினால் தான் தெரிய வரும்.இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை தனுஷ் ஐஸ்வர்யா திருமண நாளான நவம்பர் 18ம் தேதி வெளியிடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

Leave a Comment