எத வச்சி வெற்றிமாறன் இப்படி எல்லாம் பேசுறாரு? ஆவேசப்பட்ட சரத்குமார்.!

வெற்றிமாறன் கூறிய கருத்துக்கு எதிராக சரத்குமார் தற்போது ஆவேசத்துடன் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். தமிழில் பொல்லாதவன் என்ற படத்தின் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமானவர் வெற்றிமாறன். இவரது இரண்டாவது திரைப்படமான ஆடுகளம் தேசிய விருது பெற்றது. குறுகிய காலத்திலேயே முண்ணனி இயக்குனர் என்ற இடத்தை அடைந்திருந்தார் வெற்றிமாறன். பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த இவர், பின்னர் இயக்குனராக அவதாரம் எடுத்தார். இவர் இயக்கிய ஆடுகளம் மட்டுமே ஆறு தேசிய விருதுகளை பெற்றது. கடைசியாக இவர் இயக்கிய அசுரன் படம் மிகப் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இன்றளவும் பேசப்படும் படமாக இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எத வச்சி வெற்றிமாறன் இப்படி எல்லாம் பேசுறாரு? ஆவேசப்பட்ட சரத்குமார்.! 1

விளம்பரம்

இந்த நிலையில் சென்னையில் நடந்த குறும்பட விழாவில் கலந்து கொண்ட வெற்றிமாறன், பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார். சினிமாவை திராவிட இயக்கங்கள் கையில் எடுத்த பின்பு தான் கலை மக்களுக்கானது என்று பேசினார்கள், மக்களை பிரதிபலிப்பது தான் கலை என்று உணர்த்தினார்கள், அந்த கலையை நாம் சரியாக கையாள வேண்டும். ஏற்கனவே நம்மிடமிருந்து பல அடையாளங்களை திருடி கொண்டார்கள். திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பதும், ராஜராஜ சோழனை இந்து அரசனாக காட்டுவதும் தொடர்ந்து நடப்பதாக வெற்றிமாறன் குற்றம் சாட்டியிருந்தார். வெற்றிமாறனின் இந்த கருத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.

தொடர்புடையவை  வேதாளம் ஒரு க்ரிஞ் படம்.! போலோ ஷங்கர் இயக்குனர் சர்ச்சை பேச்சு.! வெளுத்து வாங்கிய அஜித் ரசிகர்கள்.!

எத வச்சி வெற்றிமாறன் இப்படி எல்லாம் பேசுறாரு? ஆவேசப்பட்ட சரத்குமார்.! 3

விளம்பரம்

மேலும் படங்களில் வரலாற்று திரிபுகள் காட்டப்படுவதாகவும் வெற்றிமாறன் பேசியிருந்தார். அவர் பொன்னியின் செல்வன் படத்தை பற்றி தான் அப்படி பேசி இருக்கிறார் என்று பெரிய பழுவேட்டரையராக நடித்த சரத்குமாரிடம் இது குறித்து கேட்கப்பட்டது. அப்போது படத்தில் நடிப்பது மட்டும்தான் வேலை, இது குறித்து எல்லாம் என்னிடம் கேட்காதீர்கள். இயக்குனரிடம் போய் இதெல்லாம் கேளுங்கள். அல்லது கதை எழுதிய ஜெயமோகனிடம் சென்று கேளுங்கள் என்று கோபத்துடன் பேட்டி அளித்தார். அவரின் பேட்டி தற்போது வைரல் ஆகி வருகிறது நீங்களும் அவரின் பேட்டியை காண.. Watch the below Video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Thanthi TV

விளம்பரம்

Leave a Comment