முந்தைய சீசனில் பெண்கள் பற்றி தரக்குறைவாக பேசிய ஒருவரை வெளியே அனுப்பிய போது, இந்த சீசனில் அசீமை மற்றும் ஏன் வெளியே அனுப்பவில்லை? என்று கமலின் நெருங்கிய தோழியும் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்தவருமான ஸ்ரீபிரியா கேள்வி எழுப்பி இருக்கிறார். பிக்பாஸ் சீசன் 6ஐ பிரபலங்கள் பலரும் தொடர்ந்து பார்த்து வருகின்றனர். இந்த சீசனில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர் அசீம் ஆயிஷாவை முகம் சுளிக்கும் வண்ணம் வாடி போடி என்று கேவலமாக பேசினார். அது மட்டும் இல்லாமல் விக்கிரமனை பார்த்து வாடா போடா என்றும், வெள்ளை சட்டை போட்டால் நீ பெரிய அரசியல்வாதியா என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருந்தார். அவரின் இந்த செயல்பாடுகள் பலரையும் முகம் சுளிக்க வைத்திருந்தது. அசீமுக்கு எதிராக நெட்டிசன்கள் பலரும் கொதிக்க தொடங்கினர். அசீமை கலாய்த்து மீம்ஸ்களும் பறக்கத் தொடங்கியது.

இந்த நிலையில் நேற்று எபிசோடில் அசீமை குறி வைக்கும் விதமாக ஒரு டாஸ்க் ஒன்றை கமலஹாசன் வைத்திருந்தார். அதில் ரெட் கார்டை உங்களுக்கு பிடிக்காத நபர்களுக்கு வார்னிங் கொடுக்கும் விதமாக கொடுக்கலாம் என்று மற்ற போட்டியாளர்களை அறிவுறுத்தி இருந்தார். அசல் கோளாறு மற்றும் தனலட்சுமி தவிர அனைவருமே அசீமுக்கு தான் அந்த ரெட் கார்டை கொடுத்திருந்தனர். இது அசிமுக்கு பெருத்த அவமானமாக போனது. ஆனால் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாதது போல, நான் பகிரங்க மன்னிப்பு கோருகிறேன். மன்னிப்பு கேட்பதற்கும் ஒரு தைரியம் வேண்டும். அந்த தைரியம் எனக்கு இருக்கிறது என்று அப்போதும் திமிர்த்தனமாக பேசினார் அசீம். ஆனால் இதையெல்லாம் இணையவாசிகளும் பிக்பாஸ் ரசிகர்களும் சுத்தமாக ரசிக்கவில்லை. இவர் கடந்த சீசனில் கலந்து கொண்ட அபிஷேக் ராஜாவை விட மோசம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த சீசனை கவனித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ பிரியா தற்போது ட்விட்டரில் ட்வீட் ஒன்றை போட்டு இருக்கிறார். ஸ்ரீபிரியா கமலின் நெருங்கிய தோழியும், கமலின் மக்கள் நீதி மையம் கட்சியில் முக்கிய பொறுப்பிலும் இருக்கிறார். அவர் பிக்பாஸை பார்த்து விட்டு ட்விட்டர் பக்கத்தில் என் நினைவு சரியாக இருந்தால், கடந்த சீசனில் பெண் போட்டியாளர்களை தரக்குறைவாக பேசிய ஒருவரை உடனடியாக வெளியே அனுப்பி இருக்கிறீர்கள். ஆனால் தற்போது அசீமை மட்டும் ஏன் வெளியே அனுப்பாமல் வைத்திருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். மேலும் விக்ரமன் மட்டும் அனைவராலும் குறிவைக்கப்படுகிறாரா? என்ற கேள்வியும் அவர் எழுப்பி இருக்கிறார். கமலின் நெருங்கிய தோழியே இவ்வாறு கேள்வி எழுப்பி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரெட் கார்டு கொடுக்கும் டிராமாவை கமல் நிகழ்த்தியதாக பலரும் குற்றச்சாட்டு வைத்த நிலையில், ஸ்ரீபிரியாவே இவ்வாறு கேள்வி எழுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சீசன் மூன்றின் பொழுது நடிகர் சரவணன் பேருந்தில் செல்லும் போது நானே பெண்களை உரசி இருக்கிறேன் என்று கூறியிருந்தார். இதற்கு வெளியே பல கண்டனங்கள் எழுந்தது. இதையடுத்து அவர் உடனடியாக பிக்பாஸ்ஸில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் தற்போது அசல் கோளாறு பெண்களிடம் முறை தவறி நடப்பதும், அவர்களை அத்துமீறி தொடுவதும் போன்ற அசிங்கமான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். அதை கமல் எதுவுமே கேட்காமல் விட்டுவிட்டார், மேலும் வாடி போடி என்று பெண்களை ஒருமையில் பேசிய அசீமையும் கடுமையாக கடிந்து கொள்ளாமல், தடவி கொடுப்பது போல் ஒரு ரெட் கார்டு ட்ராமாவை கமல் நிகழ்த்தி இருக்கிறார் என்று நெட்டிசன்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.