விதிகள் மீறவில்லை, வாடகை தாய் விவகாரத்தில் நயன்தாராவுக்கு ஆதரவாக வந்த தீர்ப்பு.!

நயன்தாரா விக்னேஷ் சிவன் இரட்டைக் குழந்தைகள் பெற்ற விவகாரத்தில் அவர்கள் எந்த விதிகளையும் மீறவில்லை என்றும், 2016 ஆம் ஆண்டு இருவரும் பதிவு திருமணம் செய்துள்ள சான்றிதழை சமர்ப்பித்துள்ளார்கள் என்றும் சுகாதாரத்துறை சார்பாக விளக்கம் அளித்திருக்கின்றனர். தமிழின் லேடி சூப்பர் ஸ்டார் ஆக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நானும் ரவுடிதான் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் மலர்ந்தது. இருவரும் ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், ஜூன் ஒன்பதாம் தேதி சென்னைக்கு அருகில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் வைத்து மிகப் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு அவர்கள் இருவரும் தங்களுடைய படங்களில் நடிப்பதில் பிஸியாக இருந்தனர். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.! 

விதிகள் மீறவில்லை, வாடகை தாய் விவகாரத்தில் நயன்தாராவுக்கு ஆதரவாக வந்த தீர்ப்பு.! 1

விளம்பரம்

 

இந்த நிலையில் கடந்த ஒன்பதாம் தேதி தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிகள் சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தனர். இந்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் பகிர்ந்து, நானும் நயன்தாராவும் இரட்டைக் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆகிவிட்டோம் என்று பகிர்ந்திருந்தார். இது பல சந்தேகங்களை கிளப்பியது. திருமணமாகி நான்கு மாதங்களில் எப்படி இரட்டை குழந்தைகள் பிறக்க முடியும்? என்று பலரும் கேள்விகள் எழுப்பினர். மேலும் இவர்கள் விதிகளை மீறி வாடகைத் தாய் மூலமாக குழந்தைகளை பெற்றுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்தனர். இதனால் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்து இதை விசாரிக்க உத்தரவிட்டிருந்தார். அந்த குழுவின் அறிக்கை தற்போது வெளியாகியிருக்கிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  சுந்தர் சி இயக்கியுள்ள "காபி வித் காதல்" படத்தின் முதல் ப்ரோமோ வெளியானது.!

விதிகள் மீறவில்லை, வாடகை தாய் விவகாரத்தில் நயன்தாராவுக்கு ஆதரவாக வந்த தீர்ப்பு.! 3

 

விளம்பரம்

 

அதில் 11/3/2016 ஆம் ஆண்டு விக்னேஷ் இவனுக்கும் நயன்தாராவிற்கும் பதிவு திருமணம் செய்த பட்ட சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த திருமண பதிவு சான்றிதழின் உண்மை தன்மை பதிவு துறையால் சரி பார்க்ப்பட்டது. 2020 ஆம் ஆண்டு நயன்தாராவின் குடும்ப மருத்துவர் வழங்கிய பரிந்துரை கடிதத்தின் அடிப்படையில், சிகிச்சை வழங்கப்பட்டு 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சினை முட்டை மற்றும் விந்தணு சேமிக்கப்பட்டு, நவம்பர் 2021 நாம் ஆண்டு வாடகைத்தாய் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 2022 ஆம் ஆண்டு கருமுட்டைகள் வாடகை தாயின் கருப்பையில் செலுத்தப்பட்டு, குழந்தைகள் அக்டோபர் மாதம் பிரசவிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. மேலும் வாடகைத்தாய் சென்னையில் தனியார் மருத்துவமனையில் பேறுக்கால பராமரிப்பு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கரு வளர்ந்து குழந்தைகள் ஆன பின்னர் இந்த குழந்தைகள் 9/10/2022 அன்று தம்பதிகளிடம் வழங்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

 

விதிகள் மீறவில்லை, வாடகை தாய் விவகாரத்தில் நயன்தாராவுக்கு ஆதரவாக வந்த தீர்ப்பு.! 5 விதிகள் மீறவில்லை, வாடகை தாய் விவகாரத்தில் நயன்தாராவுக்கு ஆதரவாக வந்த தீர்ப்பு.! 7 விதிகள் மீறவில்லை, வாடகை தாய் விவகாரத்தில் நயன்தாராவுக்கு ஆதரவாக வந்த தீர்ப்பு.! 9இதன் மூலமாக நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிகள் எந்த விதியையும் மீறவில்லை என்று தெரிய வருகிறது. ஆனால் தனியார் மருத்துவமனையில் சில குறைபாடுகளை கண்டறிந்துள்ளது ஐசிஎம்ஆர் வழிகாட்டு முறைகளின் படி மருத்துவமனையில் தம்பதிகளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை அளித்த விவரங்களும், வாடகை தாயின் உடல் நலன் குறித்த ஆவணங்களும் முறையாக வைத்திருக்க வேண்டும். ஆனால் இது சம்பந்தப்பட்ட எந்தவித ஆவணங்களும் சரியாக மருத்துவமனையால் பராமரிக்கப்படவில்லை. எனவே இந்த நெறிமுறைகளை பின்பற்றப்படாததால் தனியார் மருத்துவமயின் செயற்கை கருத்தரித்தல் மையத்தை ஏன் தற்காலிகமாக மூடக்கூடாது என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்
தொடர்புடையவை  வெளிநாட்டில் கணவர் குழந்தைகளுடன் புத்தாண்டை கொண்டாடும் சினேகா.! அழகிய புகைப்படங்கள்.!

Youtube video Code Embed Credits: Sun News

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment