ஜெர்மனி அருங்காட்சியகத்தின் விலைமதிக்க முடியாத பழங்கால நகைகளை கொள்ளையர்கள் சூறையாடினர்!!

ஜெர்மனி அருங்காட்சியகத்தின் விலைமதிக்க முடியாத பழங்கால நகைகளை கொள்ளையர்கள் சூறையாடினர்!! 1

ஐரோப்பிய நாட்டின் பழங்கால பொக்கிஷங்கள், அரிய கலை பொருட்கள் உள்ளிட்டவை அந்த அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை முகமூடி கொள்ளையர்கள் 2 பேர் அருங்காட்சியகத்தின் ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர் அவர்கள் பழங்கால நகைகள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் இருந்த நகை பெட்டி ஒன்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

விளம்பரம்

அந்த நகை பெட்டியில் 18-ம் நூற்றாண்டை சேர்ந்த வைரங்கள், மாணிக்கங்கள் உள்பட விலைமதிக்க முடியாத நகைகள் ஏராளமாக இருந்ததாக அருங்காட்சியக அதிகாரிகள் கூறியுள்ளனர். அருங்காட்சியகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி இருப்பதாகவும், அதை அடிப்படையாக கொண்டு அவர்களை வலை வீசி தேடி வருவதாகவும் போலீசார் அறிவித்துள்ளனர்.

விளம்பரம்

Leave a Comment