பாக்கியலட்சுமி தொடரில் தற்போது கோபியிடம் ராதிகா கடும் கோபத்தில் இருப்பது போன்ற வீடியோவை வெளியிட்டு உள்ளது விஜய் டிவி.
இன்றைய எபிசோடில் கோபியும் ராதிகாவும் மயூவுக்காக பள்ளிக்கு செல்கின்றனர். பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு நடக்கிறது. அங்கு உள்ளே செல்லும்போது இனியாவை பார்த்து விடுகிறார் கோபி. இனியாவிடம் ஏதோ பேச முயற்சிக்கும் போது மயூ வந்து வாங்க டாடி போகலாம் என்று சொல்கிறார். இதை பார்த்து இனியா அதிர்ச்சி அடைகிறார்.்பின்னர் மயூவுக்கு தந்தை என்ற இடத்தில் கையெழுத்து போடுகிறார் கோபி ஒருபுறம் இனியாவுக்காக பாக்யா பள்ளிக்கு வந்திருக்கிறார். அங்கு இனியாவுக்காக கையெழுத்து போடுகிறார் பாக்யா. அப்போது இனியாவின் ஆசிரியை இனியாவின் தந்தை வரவில்லையா என்று கேட்ட அவர் வரவில்லை என்று பதில் அளிக்கிறார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.!

வெளியே வந்து கோபி ராதிகாவிடம் நான் இனியாவின்ஆசிரியை பார்த்து விட்டு வருகிறேன் என்று கூறுகிறார். கோபியுடன் மயூவும் வருகிறார் அப்போது இனியா நீங்கள் ஒன்னும் எனக்கு கையெழுத்து போட தேவையில்லை, என் அம்மா எனக்காக கையெழுத்து போட்டு விட்டார். நீங்கள் உங்கள் வேலையை பார்க்கலாம் என்று சொல்லி திட்டி அனுப்பி விடுகிறார். அப்போது சுற்றி இருந்தவர்கள் இனியா அப்பா வேறு திருமணம் செய்து கொண்டாரா என்று கேள்வி எழுப்புகின்றனர். அதற்கு பாக்யா இதை நீங்கள் இனியா அப்பாவிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறிவிடுகிறார். மேலும் நீங்கள் எப்போதும் போல என் மகளிடம் சகஜமாக பழகுங்கள். அவரை தனியாக ஒதுக்கி வைக்க கூடாது என்று மகளின் நண்பர்களுக்கு அறிவுரையும் வழங்குகிறார். பின்னர் இனியா பாக்யாவை கட்டிப்பிடித்து அழுகிறார்.

காரில் ஏற வந்த போது மயூ கோபியிடம் நீங்கள் எனக்கு அப்பாவா இல்லை இனியா அக்காவிற்கு அப்பாவா? அவரும் உங்களை அப்பா என்று கூப்பிடுகிறாரே என்று கேட்கிறார். அதற்கு பதில் அளித்த கோபி முன்பு இனியாவின் அப்பாவாக இருந்தேன். இப்பொழுது உனக்கு அப்பா என்று சமாளித்து அவரை காற்றில் ஏற்றி வைத்தார். அப்போது ராதிகா கோபியிடம் நீங்கள் செய்வதெல்லாம் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை, மயூவுக்காக தான் உங்களை அழைத்து வந்தேன் என்று சொல்லி ருத்ரதாண்டவம் ஆடுகிறார்.அந்த ப்ரோமோவை நீங்களும் காண.. ! Watch the below video..!
Youtube Video Code Embed Credits: Vijay Television