துணை முதல்வர் பதவிக்கு குட்டையை குழப்பும் காங்கிரஸ்!!

துணை முதல்வர் பதவிக்கு குட்டையை குழப்பும் காங்கிரஸ்!! 1

பல்வேறு பிரச்சினைகள் நடந்து முடிந்து மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சியமைத்துள்ள நிலையில் துணை முதல்வர் பதவிக்கு போட்டிகள் ஏற்பட்டிருக்கிறது.

தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸுடன் இணைந்து சிவசேனா மகாராஷ்டிரத்தில் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்று கொண்டார். துணை முதல்வர் பதவி தேசியவாத காங்கிரஸுக்கும், சபாநாயகர் பதவி காங்கிரஸுக்கும் வழங்க பேச்சுவார்த்தையில் முடிவானதாக அஜித்பவார் தெரிவித்தார்.

விளம்பரம்

ஆனால் தற்போது காங்கிரஸ் துணை முதல்வர் பதவியை அடைய விரும்புவதாக தெரிகிறது. இதற்காக சபாநாயகர் பதவியை தேசியவாத காங்கிரஸுக்கு அளிக்கவும் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இல்லையென்றால் இரு கட்சிகளில் இருந்தும் ஒவ்வொருவரை தேர்ந்தெடுத்து இரு துணை முதல்வர் பதவிகளை வழங்கவேண்டும் என்று கேட்க உள்ளார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் மறுபடியும் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டு விடுமோ என சிவசேனா கட்சியினர் மத்தியில் பதற்றமான நிலை இருப்பதாக கூறப்படுகிறது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment