
சென்னையில் உள்ள கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 4 கல்லூரிகள், வளாகங்களின் தேர்வுகள் தொடர் மழையால் இன்று ஒத்தி வைக்கப்பட்டது.
தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்து உள்ளார்.இதேபோன்று சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் இன்று தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என நிர்வாகம் அறிவித்து உள்ளது.
விளம்பரம்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் தொடர் மழையால் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
விளம்பரம்