பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது ஹேமாவை ரவுடிகள் கடத்தி அவரை வடநாட்டிற்கு செல்லும் ஒரு லாரியில் ஏற்றி அனுப்பி விடுகின்றனர். இது தெரியாமல் கண்ணம்மா ரோட்டில் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார். இதனால் ஹேமாவின் நிலைமை என்ன ஆகும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில் தற்போது குழந்தைகள் இருவரும், கண்ணம்மாவிடம் சென்றுவிட்டன. பாரதியோ டி.என்.ஏ டெஸ்ட் முடிவகள் வந்தால் மட்டுமே லெட்சுமி மற்றும் ஹேமாவை தனது குழந்தைகளாக ஏற்றுக் கொள்வேன் என்று கூறிவிட்டார். அவர் டி.என்.ஏ டெஸ்ட்டை வாங்குவதற்காக டெல்லிக்கு புறப்பட்டு சென்று விட்டார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

இந்த நிலையில் ஹேமா தனது அப்பாவை கண்டுபிடிக்கப் போவதாக கூறி நடுரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கிறார். அப்போது அவரை சந்திக்கும் வில்லி வெண்பா உன் அப்பா யார் என்று உன் அம்மாவுக்கே தெரியாது, நீ எங்கே போய் கண்டுபிடிக்க போகிறாய்? என்று சொல்லி கேலியாக சிரிக்கிறார். இதனால் கடுப்பான ஹேமா ஒரு பெரிய கல்லை எடுத்து வெண்பாவின் மண்டையை உடைக்கிறார். இதனால் கோபமான வெண்பா ரவுடிகளை ஏவி விட்டு ஹேமாவை கடத்தி ஒரு குடோனில் அடைத்து வைத்திருக்கிறார். பிறகு ஹேமாவை கொலை செய்து விடுமாறு அந்த ரவுடிகளுக்கு கட்டளை இடுகிறார் வெண்பா. தன்னை விட்டு விடுமாறு எவ்வளவோ கதறியும் ஹேமாவின் வாயையும், கையையும் கட்டிப் போட்டு விடுகிறார்கள்.

ஆனால் அதில் ஒரு ரவுடி இந்த குழந்தையை கொலை செய்வதை விட நல்ல விலைக்கு விற்று விடலாம் என்று ஆலோசனை வழங்குகிறார். இதனால் ஒருவரை அழைத்து வந்து அவருக்கு அதிக தொகைக்கு சினிமாவை விற்று விடுகின்றனர். ஹேமா எவ்வளவு கதறியும் அவரை ஒரு லாரியில் ஏற்றி அனுப்பி விடுகின்றனர் .ஆனால் இந்த விஷயங்கள் எல்லாம் தெரியாமல் ஹேமாவை தேடி ரோடு ரோடாக அலைந்து கொண்டிருக்கிறார் கண்ணம்மா. ஹேமாவை கண்ணம்மா கண்டுபிடிப்பாரா? மீண்டும் ஹேமாவுடன் அவர் இணைவாரா என்பதை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! Watch the below video.!
YouTube Video Code Embed Credits: Vijay Television