பிஎஸ்என்எல் இல் விருப்ப ஓய்வு கேட்டு 78,300 பேர் விண்ணப்பம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற78,300 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விருப்ப ஓய்விற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிந்த நிலையில் அது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. பிஎஸ்என்எல் இல் 78,300 பேரும்
எம்டிஎன்எல் இல் 14,378 பேர் என மொத்தம் 92,700 பேர் விருப்ப ஓய்வு கேட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் பணியாளர்களுக்கு தற்போது ஆண்டிற்கு 14,000 கோடி ரூபாய் சம்பளம் அளிக்கப்பட்ட நிலையில் விருப்ப ஓய்வு திட்டத்திற்கு பிறகு அது 7,000 கோடி ரூபாயாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு பின் பிஎஸ்என்எல் பணியாளர்களின் எண்ணிக்கை சரி பாதியாக குறையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

இதுபோல டெல்லி மும்பையில் மட்டும் சேவை தந்து வரும் எம்டிஎன்எல் நிறுவனமும் விருப்ப ஓய்வு திட்டம் மூலம் ஆண்டிற்கு1,800 கோடி ரூபாய் சேமிக்கும் என தெரிகிறது. பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனங்களான பிஎஸ்என்எல் எம்டிஎன்எல் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகின்றன

விளம்பரம்

Leave a Comment